71வது தேசிய விருதுகள் நிகழ்ச்சி… 2023ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை பெறும் பிரபலங்கள்!
71st National Film Awards 2025: அகில இந்திய அளவில் ஆண்டுதோறும் நடிகர்கள் மற்றும் திரையுலகினரை கௌரவிக்கும் விதத்தில், மத்திய அரசு வழங்கும் விருதுதான் தேசிய விருது. இந்த 2025ம் ஆண்டிற்கான விருதுவழங்கும் விழா இன்று 2025 செப்டம்பர் 23ம் தேதியில் நடைபெற்று வருகிறது.

பான் இந்திய அளவில் ஆண்டுதோறும் திரையுலகினர்களை கௌரவிக்கும் விதத்தில், இந்திய அரசு வழங்கும் விருதுதான் தேசிய விருது. இந்த 2025ம் ஆண்டில் 71வது தேசிய விருது (71st National Awards) வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் யார் யார் விருதுகளை பெறவுள்ளார்கள் என்ற அறிவிப்பானது, கடந்த ஆகஸ்ட் 1, 2025 அன்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2023ம் ஆண்டிற்கான தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் சிறந்த படம், சிறந்த நடிகர்கள் மற்றும் சிறந்த இயக்குநர்கள் போன்ற பல விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 71வது தேசிய விருது வழங்கும் விழாவில், ஷாருக்கான் (Shah Rukh Khan), மோகன்லால்(Mohanlal), ஜி.வி. பிரகாஷ் (GV Praksh), ஊர்வசி உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். மேலும் இந்த சினிமா பிரபலங்களுக்கு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (Draupadi Murmu) விருது வழங்கவுள்ளார். இந்த விருதுகளானது இன்று 2025 செப்டம்பர் 23ம் தேதியில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 71வது தேசிய திரைப்பட விருதுகள் பிரமாண்டமாக நடைபெற்றுவந்த நிலையில், இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கியிருந்தார். தேசிய சிறந்த நடிகருக்கான விருது ஜவான் படத்துக்காக ஷாருக்கானுக்கும் மற்றும் டுவெல்த் ஃபெயில் பட நடிகர் விக்ராந்த்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் பிரபலங்கள் பலரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் கையினால் தேசிய விருதுகளை பெற்றிருந்தனர்.
இதையும் படிங்க : நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ




சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது :
தமிழ் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, ஜிவி. பிரகாஷ் குமாருக்கு கிடைத்துள்ளது. தனுஷின் வாத்தி படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷிற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
தேசிய சிறந்த நடிகர் :
பான் இந்தியா அளவிற்கு சிறந்த நடிகருக்கான விருது, ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்படுகிறது, மேலும் டுவெல்த் ஃபெயில் என்ற படத்திற்காக நடிகர் விக்ராந்த் பாசிக்கும் வழங்கப்படவுள்ளது.
2023ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது :
2023ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்படவுள்ளது. திரையுலகத்தில் தனது பங்களிப்பிற்காக மத்திய அரசு மோகன்லாலுக்கு வழங்கி அவரை கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மோகன்லாலுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது – மத்திய அரசு அறிவிப்பு!
சிறந்த தமிழ் படத்திற்கான விருது :
2023ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படம் என்ற விருதை ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படமானது பெற்றிருந்தது. இந்த விருதை இயக்குநர் ராம்குமார் பாலகிருணன் பெறவுள்ளார்.
சிறந்த திரைக்கதை விருது :
2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைக்கதைக்கான விருது, தமிழ் இயக்குநரான ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு பார்க்கிங் படத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருத்திய குடியரசு தலைவர் கையினால் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்படவுள்ளது.
சிறந்த துணை நடிகை விருது
2023 ஆம் ஆண்டு திரைப்படங்களில் சிறந்த துணை நடிகைக்கான விருது, நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளொழுக்கு என்ற மலையாள படத்திற்காக அவருக்கு வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.