GV Prakash : தனுஷின் அந்த படத்தில் வில்லனாக நடிக்கவேண்டியது… – ஜி.வி. பிரகாஷ் ஓபன் டாக்!
GV Prakash About Dhanush : தமிழில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளாராகவும் இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் பிளாக்மெயில் என்ற படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜி.வி. பிரகாஷ், தனுஷின் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மறுத்தது குறித்து பேசியுள்ளார்.

நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் கிங்ஸ்டன் (Kingston). இந்த படத்தை அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் (Kamal Prakash) இயக்கியிருந்தார். இந்த படமானது கடல் சார்ந்த அட்வெஞ்சரஸ் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. ஆனால் இப்படமானது இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த படத்தை தொடர்ந்து, மேலும் பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். தமிழ் அறிமுக இயக்குநர் மு. மாறன் (Mu.Maran) இயக்கத்தில், இவர் நடித்திருக்கும் திரைப்படம்தான் பிளாக்மெயில் (Blackmail). இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் கடத்தல் மற்றும் க்ரைம் திரில்லர் சார்ந்த படமாக உருவாகியிருந்தது. இந்த படமானது வரும் 2025 செப்டம்பர் 12 ஆம் தேதியில் வெளியாகவுள்ளது.
தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜி.வி. பிரகாஷ் குமார், தனுஷின் (Dhanush) படத்தில் அவருடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து கூறியுள்ளார். எந்த படத்தில் தெரியுமா? தனுஷின் இயக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான ராயன் படத்தில் தான்.




இதையும் படிங்க : அமரன் படத்திற்கு குவியும் அவார்ட்ஸ்.. சைமா விருதுகளை வென்ற சாய் பல்லவி – சிவகார்த்திகேயன்!
தனுஷிற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தவிர்த்த ஜி.வி. பிரகாஷ்
அந்த நேர்காணலில் நடிகர் ஜி.வி. பிரகாஷ், பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். மேலும் அவர் அதில், ” ராயன் படத்தில் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தனுஷை முதுகில் குத்தும் மாதிரியான வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது, சரி ஒரு நல்ல நண்பனுடன் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டாம் என நினைத்தேன். ஆனால் அவருக்கு நேர் எதிர் வில்லனாக கூட நடித்துவிடுவேன் . விரைவில் அதுவும் நடக்கலாம் என நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார், அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : விஜய் குறித்த கேள்வி.. மேடையில் வெட்கப்பட்ட திரிஷா கிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ!
ராயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பற்றி ஜி.வி. பிரகாஷ் பேசிய வீடியோ
#GVPrakash Recent
– I got a chance to act in #Raayan, but I didn’t take it.
– If I get a villain role, I might do it.#IdliKadai #Dhanushpic.twitter.com/EAMYE0svzo— Movie Tamil (@_MovieTamil) September 7, 2025
ஜி.வி. பிரகாஷ் மற்றும் தனுஷின் காமினேஷனில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட்டாகிவருகிறது. அந்த வகையில், தனுஷின் நிலவிற்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தொடர்ந்து, இட்லி கடை, டி54 போன்ற படங்களில் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜி.வி. பிரகாஷ் மற்றும் தனுஷ் கூட்டணி பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.