Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dulquer Salmaan : லோகா 2 படத்தில் அவர்தான் ஹீரோ.. துல்கர் சல்மான் சொன்ன சப்ரைஸ்!

Lokah Chapter 2 Update : தென்னிந்திய சினிமாவில் பெண் லீட் கதாபாத்திரத்தை வைத்து வெளியான படங்களில், அதிகம் வசூல் செய்த முதல் படமாக இடம் பிடித்தது லோகா சாப்டர் 1 : சந்திரா. இந்த படத்தின் பாகம் 2ல் யார் ஹீரோ என்பது குறித்து துல்கர் சல்மான் சொன்ன விஷயம் பற்றி பார்க்கலாம்.

Dulquer Salmaan : லோகா 2 படத்தில் அவர்தான் ஹீரோ.. துல்கர் சல்மான் சொன்ன சப்ரைஸ்!
துல்கர் சல்மானின் லோகா படம் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 07 Sep 2025 16:01 PM IST

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் நடிகராக மட்டுமில்லாமல், படங்களை தயாரித்தும் வருகிறார். இவரின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அவர் நாயகனாக நடிக்கும் படங்களும் மற்ற நடிகர்களின் படங்களும் தயாரிக்கப்படுகின்றது. அந்த வகையில் துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் (Wayfarer Films) நிறுவனத்தின் கீழ் வெளியான படம்தான் லோகா சாப்டர் 1: சந்திரா (Lokah Chapter 1: Chandra). இந்த படத்தை இயக்குநர் டாம்னிக் அருண் (Dominic Arun) இயக்கியுள்ள நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் அவருடன் இணைந்து முக்கிய வேடத்தில்  நடிகர் நஸ்லென் (Naslen) நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து, சுமார் 5 பாகங்களாக லோகா படம் உருவாக்கவுள்ளதாக துல்கர் சல்மான் அறிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் பாகம் 2ல் நடிகர் யார் என்பது குறித்த அப்டேட்டை நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : சினிமாவில் 28 ஆண்டுங்களை கடந்த சூர்யா.. வெளியான ஸ்பெஷல் வீடியோ!

லோகா 2வில் ஹீரோ யார் என்பது பற்றி பேசிய துல்கர் சல்மான் :

அதன்படி சமீபத்தின் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான் லோகா படத்தின் அடுத்தடுத்த சாப்டர்கள் உருவாகுவது குறித்து பேசியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், “லோகா படத்தின் அடுத்த பார்ட்டில் நடிகர் டொவினோ தாமஸ்தான் நாயகனாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு அடுத்த நிலை கதாபாத்திரங்களாக நாங்கள் இருப்போம்” என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்.. மதராஸி முதல் நாள் வசூல் இவ்வளவா?

லோகா திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

இந்த லோகா படமானது மலையாளம் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இப்படமானது வெளியாகிய 6 நாட்களிலேயே சுமார் ரூ 101 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படமானது வெறும் ரூ 30 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், அதற்கு இரண்டு மடங்காக வசூலை குவித்து வருகிறது.

மேலும் விரைவில் இப்படமானது சுமார் ரூ 200 கோடிகளை தொடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் தென்னிந்திய சினிமாவில் பெண் லீட் கதாபாத்திரம் கொண்ட படங்களின் வசூலில், கல்யாணி பிரியதர்ஷனின் லோகா முதல் இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.