Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya : சினிமாவில் 28 ஆண்டுங்களை கடந்த சூர்யா.. வெளியான ஸ்பெஷல் வீடியோ!

28 Years of Suriya : தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவர் கடந்த 1997ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார், இன்றுடன் சுமார் 28 வருடங்களை சினிமாவில் நிறைவு செய்துள்ளார். இது குறித்த ஸ்பெஷல் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suriya : சினிமாவில் 28 ஆண்டுங்களை கடந்த சூர்யா.. வெளியான ஸ்பெஷல் வீடியோ!
சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Sep 2025 12:52 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி அதிரடி நாயகனாக சினிமாவில் நடித்து வருபவர் சூர்யா (Suriya). இவர் பல முன்னணி இயக்குநர்களுடன் படங்களில் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் சினிமாவில் இவருக்கு முதல் படமாக அமைந்தது நேருக்கு நேர் (Nerrukku Ner). கடந்த 1997ம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான, இப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக நுழைந்தார். இந்த படத்தில் சூர்யா, தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது 1997ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்று 2025ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியுடன் சுமார் 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படத்துடன்தான் சூர்யாவும் சினிமாவில் நுழைந்த நிலையில், இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இதை கொண்டாடும் விதத்தில் ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டைமென்ட் (2D Entertainments) நிறுவனமானது வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பட வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மக்களை ஈர்க்கும் படம்.. மதராஸி படத்துக்கு ஷங்கர் வாழ்த்து!

28 ஆண்டுகளை சினிமாவில் கடந்த சூர்யா குறித்த ஸ்பெஷல் வீடியோ :

நடிகர் சூர்யாவின் நடிப்பில் இதுவரை சுமார் 43 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் படத்தில் நடித்திருக்கிறார். சினிமாவில் தயாரிப்பாளராக, நடிகராக மற்றும் சில பாடல்களையும் பாடியிருக்கிறார் சூர்யா. தந்தை சிவகுமார் போல, சூர்யாவும் தனக்கென சினிமாவில் ரசிகர்களை வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்.. மதராஸி முதல் நாள் வசூல் இவ்வளவா?

இவர் சினிமாவில் 28 ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில், மேலும் பல படங்களில் ஆக்ஷ்ன் ஹீரோவாகவே நடித்து வருகிறார். மேலும் இந்த் 2025ம் ஆண்டில் தனது 50வது பிறந்தநாளையும் கொண்டாடியிருக்கும் நிலையில், இந்த ஆண்டு சூர்யாவிற்குமிகவும் அற்புதமான ஆண்டாக உள்ளது. மேலும் 2025ல் வெளியான சூர்யாவின் ரெட்ரோ படம் சுமார் ரூ.263 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

சூர்யாவின் புதிய படம் :

இந்த ஆண்டில் சூர்யாவின் நடிப்பில் கருப்பு என்ற படமானது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தைஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் நிலையில், திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சூர்யா சரவணன் என்ற தனது உண்மையான பெயரில் நடித்துள்ளார்.

இந்த படம் 2025 தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தி தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா44 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.