இணையத்தில் வைரலாகும் நடிகர் சூர்யாவின் ரீசென்ட் போட்டோஸ்!
Actor Suriya: நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது 2 படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அவரது படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் சமீபத்திய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் முன்னதாக தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்ப்பக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாவது சந்தேகத்திற்குறிய விசயமாகவே உள்ளது. இதன் காரணமாக படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிகர் சூர்யா விறுவிறுப்பாக நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து மமிதா பைஜூ உட்பட பிரபலங்கள் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அவ்வப்போது நடிகர் சூர்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




இணையத்தில் கவனம்பெறும் சூர்யாவின் போட்டோஸ்:
தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகர் சூர்யா பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போதும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போதும் ரசிகர்களுடன் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் ரசிகை ஒருவருடன் நடிகர் சூர்யா இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த லுக் இயக்குநர் வெங்கி அட்லூரியின் படத்திற்கான லுக் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களிடையே கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Suriya Recent Click 👀 pic.twitter.com/5PyLww9Eag
— Movie Tamil (@_MovieTamil) September 4, 2025
Also Read… பூஜையுடன் தொடங்கியது கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் படம்!