Lokah: சர்ப்ரைஸ் எனக்கு’ சூர்யா- ஜோதிகா பாராட்டு குறித்து பேசிய லோகா பட நஸ்லென்!
Suriya And Jothika Praise Lokah Movie : சமீபத்தில் வெளியான லோகாவில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் தமிழ் சக்சஸ் மீட்டில் பேசிய நஸ்லென், சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் வீடியோ காலில் லோகா படத்தை பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரின் நடிப்பில் பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் தயாரிப்பில் வெளியான திரைப்படம்தான் லோகா சாப்டர் 1: சந்திரா (Lokah Chapitre 1 : Chandra). இந்த படத்தை இயக்குநர் டோமினிக் அருண் (Dominic Arun) இயக்க, கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) மற்றும் நஸ்லென் (Naslen) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது ஒரு சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அதிரடி ஆக்ஷ்ன் சூப்பர் வுமனாக நடித்திருந்தார்.
இந்த லோகா படமானது ஹாலிவுட் பட பாணியில் கடந்த 2025, ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. மேலும் தமிழில் கடந்த 2025 செப்டம்பர் 1 ஆம் தேதியில் வெளியாகியிருந்தது.




இந்நிலையில், தெலுங்கில் இப்படத்தின் வெற்றி விழா செப்டம்பர் 3, 2025 அன்று நடைபெற்ற நிலையில், தமிழ் வெற்றி சந்திப்பு இன்று 2025, செப்டம்பர் 4ம் தேதியில் சென்னையில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது, மேடையில் பேசிய நடிகர் நஸ்லென், “லோகா திரைப்படத்தை வீடியோ காலின் மூலம், சூர்யா (Suriya) மற்றும் ஜோதிகா இருவரும் பாராட்டியதாகவும் படம் மிகவும் அருமையாக இருந்ததாக தெரிவித்ததாகவும் நடிகர் நஸ்லென் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ரஜினிகாந்தின் கூலி பட ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!
லோகா திரைப்படத்துக்கு சூர்யா மற்றும் ஜோதிகா பாராட்டு
லோகா திரைப்படத்தின் தமிழ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் நஸ்லென், “லோகா திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்களிடையே கிடைக்கும் வரவேற்பில் மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கு, என்னென்னெமோ வாழ்க்கையில் நடக்கிறது, வாழ்க்கை எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க : தனுஷிற்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை! அட இந்த படத்திலா?
இன்று காலையில் சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேம் வீடியோ காலில் பேசினார்கள். படம் நன்றாக இருந்ததாக சொன்னார்கள். மேலும் இந்த படத்திற்கு உறுதுணையாக இருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் நன்றி” என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் நஸ்லென் பேசியிருந்தார்.
நடிகர் நஸ்லெனின் லோகா படம் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
லோகா திரைப்படத்தின் வசூல் விவரம் :
லோகா சாப்டர் 1: சந்திரா படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ஹாலிவுட் படம்போல உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சாண்டி மாஸ்டர் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் நடிகர்கள் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் போன்ற பல பிரபலங்களும் இணைந்து சிறப்பு வேடத்தில் நடித்திருந்தனர்.
இப்படமானது உலகளாவிய வசூலில் இதுவரை சுமார் ரூ 101 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போதுவரையிலும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.