Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லோகா படத்தில் கன்னட பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் – படக்குழு உறுதி!

Lokah Chapter 1: Chandra: நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் வெளியான படம் லோகா சாப்டர் 1: சந்திரா. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்திற்கு மன்னிப்பு கோரிய படக்குழு அதனை நீக்குவதாகவும் உறிதி அளைத்துள்ளது.

லோகா படத்தில் கன்னட பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் – படக்குழு உறுதி!
லோகாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Sep 2025 11:12 AM

சிறிய பட்ஜெட்டில் படத்தை எடுத்து அது பல கோடிகளை வசூலிப்பது மலையாள சினிமாவில் புதிது அல்ல. அப்படி 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லோகா சாப்டர் 1: சந்திரா (Lokha Chapter 1: Chandra) படம் தற்போது மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்தப் படத்தை வேஃபேரர் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடிகர் துல்கர் சல்மான் தான் தயாரித்து இருந்தார். மலையாள சினிமாவில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியாகும் முதல் படம் இது இல்லை. முன்னதாக பேசில் ஜோசஃப் இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து வெளியான படம் மின்னல் முரளி. இந்தப் படம் உலக அளவில் பல விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மலையாள சினிமாவில் 2-வதாக சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான படம் லோகா சாப்டர் 1: சந்திரா. இந்தப் படத்தில் நடிகர்கள் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லேன், சாண்டி, சந்து சலிம்குமார், ரகுநாத் பலேரி, அருண் குரியன், விஜய் ராகவன், நித்யஸ்ரீ, அன்னா பென், சன்னி வேய்ன், டொவினோ தாமஸ் மற்றும் துல்கர் சல்மான் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

லோகா படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும்:

இந்த நிலையில் இந்தப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிகர் சாண்டி நடித்து இருப்பார். இவருக்கு திருமணம் செய்துவைப்பதற்காக வீட்டில் பேசும் போது அவர் ஒரு வசனத்தை கூறுவார். அதில் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லல. இந்த ஊரு பொண்ணுங்க வேண்டாம் என்று குறிப்பிடுவார். அந்தப் படத்தின் கதை பெங்களூரிவில் நடைபெறுவது போன்று காட்டப்பட்டதால் அது கன்னடிகா பெண்களை தவறாக பேசுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது புண்படுத்துவதாக உள்ளது என்று கன்னடிகா மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்த சர்ச்சையை கருத்தில் கொண்ட லோகா சாப்டர் 1: சந்த்ரா படக்குழு அந்த குறிப்பிட்ட வசனம் யார் மனதையும் புன்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை என்று தெரிவித்ததுடன் அது கன்னடிகா மக்களின் உணர்வுகளை புன்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்ததுடன் குறிப்பிட்ட அந்த வசனத்தை நீக்குவதாகவும் படக்குழு உறுதி அளித்துள்ளது.

Also Read… ஜெயிலர் 2 படம் குறித்து முக்கிய தகவலை கூறிய நெல்சன் திலீப்குமார்

லோகா படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… கமல், ரஜினி, விஜய்கிட்ட இருந்து கத்துகிட்டது என்ன? லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம்