வித்தியாசமான கதை.. கம்மி பட்ஜெட்டில் சூப்பர் படம்.. லோகா சாப்டர் 1 படம் ஓடிடி ரிலீஸ் எப்போது?
மலையாள சினிமாவில் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் லோகா சேப்டர் 1 சந்திரா. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்த்ரா (Lokah Chapter 1: Chandra). மலையாள சினிமாவில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து முன்னதாக வெளியான மின்னல் முரளி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சிறிய பட்ஜெட்டில் இவ்வளவு அருமையான சூப்பர் ஹீரோ கதையை படமாக எடுத்தது வேறு யாரும் இல்லை நடிகர் பேசில் ஜோசஃப் தான். மின்னல் முரளி படத்தை எழுதி இயக்கியதற்காக பேசில் ஜோசஃபிற்கு பல விருதுகள் கிடைத்தது. இந்திய சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் மலையாள சினிமாவை உயர்த்திப் பிடித்தது மின்னல் முரளி படம். இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மலையாள சினிமாவைப் பெருமைப் படுத்த வந்த படம் என்று தற்போது லோகா சாப்டர் 1 சந்த்ரா படத்தை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அதன்படி இயக்குநர் டாம்னிக் அருண் எழுதி இயக்கியுள்ள படம் லோகா சாப்டர் 1 சந்த்ரா. சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோ சக்தி படைத்தவராக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் நஸ்லேன், சாண்டி, அருண் குரியன், சந்து சலீம்குமார், நிஷாந்த் சாகர், ரகுநாத் பலேரி, விஜயராகவன், சிவாஜித் பத்மநாபன், நித்ய ஸ்ரீ, சரத் சபை, அன்னா பென், டொவினோ தாமஸ், சன்னி வெய்ன், துல்கர் சல்மான் என பலர் நடித்துள்ளனர்.




லோகா சாப்டர் 1 சந்த்ரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
மலையாள சினிமாவில் வெளியான லோகா சாப்டர் 1 சந்த்ரா படம் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படம் வருகின்றது. அதன்படி படம் இந்த செப்டம்பர் மாத இறுதியில் 26-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… ஜெயிலர் 2 படம் குறித்து முக்கிய தகவலை கூறிய நெல்சன் திலீப்குமார்
லோகா சாப்டர் 1 சந்த்ரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
✨🇩🇪 The Superhero Saga Rules Germany – Week 2 & Going Stronger!
🔥 Lokah: Chapter One – Chandra continues its epic run in Germany!Don’t miss the chance to experience the first Malayalam superhero saga on the big screen! 🌌⚡#Lokah #TheyLiveAmongUs@DQsWayfarerFilm @dulQuer… pic.twitter.com/NiB68KSRUm
— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 2, 2025
Also Read… கமல், ரஜினி, விஜய்கிட்ட இருந்து கத்துகிட்டது என்ன? லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம்