Bison : கபடி வீரனாக துருவ் விக்ரம்.. பைசன் படத்திலிருந்து வெளியானது ‘தீக்கொழுத்தி’ பாடல்!
Bison Movie Theekkoluthi Song : துருவ் விக்ரம் நடிப்பிலும், இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்திலும் உருவாகியிருக்கும் படம் பைசன். இப்படம் 2025 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், முதல் பாடலான தீக்கொழுத்தி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம் (Chiyaan Vikram). இவரின் மகன்தான் நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). இவரும் தனது தந்தை விக்ரம் போல் படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தி வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக மகான் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜின் (Mari Selvaraj) இயக்கத்தில் இந்த பைசன் (Bison) திரைப்படத்தில் இணைந்தார். இந்த படமானது பைசன் காளமாடன் (Bison: Kaalamaadan) என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் துருவ் விக்ரம் முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஷ்வரன் (Anupama Parameswaran) இணைந்து நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த படத்தில்தான் முதன் முறையாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைசன் படமானது கபடி விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாம்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவரின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. “தீக்கொழுத்தி” (Theekkoluthi) என்ற தொடங்கும் இந்த பாடலானது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூரி? வைரலாகும் தகவல்
மாரி செல்வராஜ் வெளியிட்ட தீக்கொழுதி என்ற முதல் பாடல் பதிவு :
Let my blazing ocean’s thirst be quenched by the single teardrop that steals away from your eyes! 🌹#TheekkoluthiOutNow 🌊💧🔥
▶️ https://t.co/fNAYqKUxWo
#BisonKaalamaadan 🦬 💥 #Theekkoluthi 🔥#BisonKaalamaadanFromDiwali #BisonKaalamaadanOnOct17 🎆@applausesocial… pic.twitter.com/oiT3glZJ8C— Mari Selvaraj (@mari_selvaraj) September 1, 2025
இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் அனுபமா பரமேஸ்வரன், ரஜீஷா விஜயன், லால், பசுபதி, ஹரி கிருஷ்ணன், கலையரசன், அழகம் பெருமாள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க : விஷ்ணு விஷாலின் கட்டா ‘குஸ்தி பார்ட் 2’.. புரோமோ வீடியோ இதோ!
இந்த படமானது வரும் 2025, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 2025 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இப்படமானது வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பைசன் படத்துடன் மோதும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம்
நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் படமானது வரும் 2025, அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமும் வெளியாகிறது.
இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் நிலையில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் நிலையில், இப்படங்கள் இடையே பாக்ஸ் ஆபிஸ் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.