Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதலில் வேறு பிளான்! விஜய் சாரின் சர்கார் படம் உருவானது இப்படிதான்.. ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம்!

AR. Murugadoss About Sarkar Movie : தமிழில் பிரபல இயக்குநராக இருந்து வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரின் இயக்கத்தில் மதராஸி படமானது வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், தளபதி விஜய்யுடன் இயக்கிய, சர்கார் படத்தின் கதை உருவான விதம் குறித்து, ஏ.ஆர். முருகதாஸ் விளக்கமாக பேசியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

முதலில் வேறு பிளான்! விஜய் சாரின் சர்கார் படம் உருவானது இப்படிதான்..  ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம்!
விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் Image Source: IMDb
Barath Murugan
Barath Murugan | Published: 31 Aug 2025 20:01 PM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ.ஆர். முருகதாஸ் (AR.Murugadoss). இவரின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் தமிழ் சினிமாவில் இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith kumar) வரை பல்வேறு பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் தனது முதல் திரைப்படமான தீனா படத்தை அஜித் குமாரை வைத்து எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இவர், நடிகர் சிவகார்த்திகேயனை (Sivakarthikeyan) வைத்து மதராஸி (Madharaasi) என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தளபதி விஜய்யுடன் அரசியல் படமான சர்கார் (Sarkar) திரைப்படம் உருவான விதம் குறித்து ஓபனாக பேசியுள்ளார். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : 90ஸ் கிட்ஸ்களின் மீட்பர் யுவன் சங்கர் ராஜாவிற்கு ஹேப்பி பர்த்டே!

சர்கார் திரைப்படம் உருவான விதம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார், அப்போது பேசிய அவர், “கத்தி திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சாரை வைத்து ட்ரையாக படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு யோசனை வந்தது. விஜய் சாரிடமும் கேட்டேன் அவருக்கு ஓகேதான் சொன்னாரு. நான் விஜய் சாரிடம் சொன்னேன், சார் இதுவரைக்கும் உங்களை யாரும் அவ்வாறு பார்க்காத மாதிரி ஒரு ட்ரை திரைப்படமாக இருக்கவேண்டும் என கூறினேன். அதற்க்கு விஜய் சார் எந்த மாதிரி இருக்கும் என கேட்டார்.

இதையும் படிங்க : மதராஸி படத்துக்காக சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளம் இவ்வளவா?

நான் அப்போது அவரிடம் சொன்னேன், ஒரு இலங்கை தமிழர் ஒருவர் தமிழகத்திற்கு அகதியாக வருகிறார், அதை தொடர்ந்து அவர் தாய்லாந்து போறாரு. எ ப்படி ஒரு அகதியின் ட்ராவலை வைத்து ஒரு படம் பண்ணலாம் என விஜய் சாரிடம் நான் கூறினேன். அவர் அதற்கு ஓகே சொன்னர். பின் அந்த கதை கொஞ்சம் பெரியதாகும்போது, வேற மாதிரி பண்ணலாமே அன்று யோசனை வந்தது. மேலும் விஜய் சாரே என்னிடம் ஒரு அரசியல் கதைக்களத்துடன், ரமணா மாதிரி ஒரு படம் பண்ணலாமே என கேட்டார். அப்படியே உருவானதுதான் சர்கார் திரைப்படம்” என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளிப்படையாக பேசியிருந்தார்.

மதராஸி படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் கூட்டணியில் இந்த மதராஸி அபத்தமானது தயாராகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.