Vetrimaaran: இன்னும் 10 – 15 நாட்களில் சிலம்பரசன் பட அப்டேட் வரும்.. வெற்றிமாறன் தகவல்!
Vetrimaran And Silambarasan Alliance Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்து வருபவர் வெற்றிமாறன். இவர் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், இந்த புதிய படம் தொடர்பான அப்டேட்டை வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.

நடிகர் சிலம்பரசன் (Silambarasan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்க, கமல் ஹாசனுடன் (Kamal Haasan) இணைந்து சிலம்பரசன் நடித்திருந்தார். இந்த படமானது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை அடுத்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கத்தில், சிலம்பரசன் STR49 என்ற படத்தில் ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் சிலம்பரசன் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ப்ரோமோ ஷூட்டிங் தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், அது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.




இதையும் படிங்க : ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் இயக்குநர் எஸ்.என். சக்திவேல் காலமானார்!
சிலம்பரசனின் புதிய படம் குறித்து வெற்றிமாறன் கூறிய அப்டேட் :
சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன், தனது தயாரிப்பில் உருவாகியிருக்கும் பேட் கேர்ள் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய வெற்றிமாறன், “என்னோட அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு இன்னும் 10 அல்லது 15 நாட்களில் வெளியாகும். சிலம்பரசனுடன் இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த பிறகு, நாங்கள் வட சென்னை படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவோம்” என இயக்குநர் வெற்றிமாறன் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். தற்போது அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : அந்த மாதிரி கதை வந்தா தமிழ் படத்தில் நாயகனாக நடிப்பேன் – நடிகர் டொவினோ தாமஸ்!
புதிய படத்தின் அப்டேட் குறித்து வெற்றிமாறன் பேசிய வீடியோ
“My Next film with #SilambarasanTR (#STR49) update will come in 10-15 Days 🔥. After completion of that, we will start #VadaChhennai2 with #Dhanush⌛💣”
– #VetriMaaranpic.twitter.com/ppDy87cJ1k— AmuthaBharathi (@CinemaWithAB) August 30, 2025
நடிகர் சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் உருவாகும் படமானது, வட சென்னை திரைப்படத்தின் கதை தொடர்பான கதைக்களத்துடன் உருவாகிறது என கூறப்படுகிறது. இந்த படத்தை வி கிரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் முக்கிய பணியாற்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் அப்டேட் மிக விரைவில் வெளியிங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.