Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிம்பரசனின் STR49 படத்தில் 3 பாடல்கள் ரெடி.. இயக்குநர் கொடுத்த அப்டேட்!

STR49 Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் சிலம்பரசன். இவரின் நடிப்பிலும் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்திலும் உருவாக்கவுள்ள படம் STR49. இந்த படத்தை பற்றிய அப்டேட்டை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகிவருகிறது.

சிம்பரசனின் STR49 படத்தில் 3 பாடல்கள் ரெடி.. இயக்குநர் கொடுத்த அப்டேட்!
சிம்பரசனின் STR49 Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Aug 2025 17:19 PM

பார்க்கிங் (Parking) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan). அவர் இயக்கிய முதல் படமே தேசிய விருதை அள்ளியிருக்கிறது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகவுள்ள படம்தான் STR49. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகராக சிலம்பரசன் (Silambarasan) நடிக்கவுள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக, டிராகன் திரைப்பட நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடிக்கவுள்ளார். இந்த படத்தின்  பூஜை கடந்த 2025, மே மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றிருந்தது. இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிகர் சந்தானமும் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்து வருகிறார்.  இந்நிலையில், சமீபத்தில் நேர்கானல் ஒன்றில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் அவர் STR49 படத்திற்கான 3 பாடல்கள் முழுவதுமாக தயாராகியுள்ளதாகவும், படத்தின் ஓப்பனிங் சாங் மாஸாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : அருண் விஜய்தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.. ரெட்ட தல பட இயக்குநர் பேச்சு!

STR49 திரைப்படத்தை பற்றி அப்டேட் கொடுத்த ராம்குமார் பாலகிருஷ்ணன் :

சமீபத்தில் நேர்கானல் ஒன்றில் சிலம்பரசனின் 49வது திரைப்படம் குறித்து, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். அதில் அவர், ” சிலம்பரசனின் STR49 படத்தில் கிட்டதட்ட 3 பாடல்கள் தயாராகியுள்ளது.  சாய் அபயங்கர் பயங்கரமாக பண்ணியிருக்காரு. நிச்சயமாக அந்த பாடல் பெரிய ஹிட்டாகும்  மேலும் ஒரு லவ் சாங் மற்றும் படத்தின் தீம் பாடலும் தயாராகியுள்ளது.

இதையும் படிங்க : ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் டிக்கெட் ரூ 2000-மா? ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த பாடல்களை கேட்கும்போது மிகவும் நன்றாக இருக்கிறது. சாதாரணமாக கேட்கும்போது நன்றாக இருக்கிறது. சிலம்பரசன் சாருக்கும் பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது” என இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இத தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பேசிய வீடியோ :

இந்த STR49 படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க, டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.மேலும் இப்படத்தில் சந்தானம் மற்றும் கயாடு லோஹர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். சில காரணங்களால் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படமானது கல்லூரி காதல் போன்ற கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாம் . இந்த படத்தின் ஷூட்டிங் இந்த 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.