Coolie : ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் டிக்கெட் ரூ 2000-மா? ரசிகர்கள் அதிர்ச்சி!
Coolie Ticket Prices : தமிழ் சினிமாவில் ரசிகர்களால் 2025ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் கூலி. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் டிக்கெட் விலை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடித்திருக்கிறார். மேலும் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருக்கிறார். தளபதி விஜய்யின் லியோ படத்தை அடுத்ததாக, இந்த கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்ங்கனது கிட்டத்தட்ட 1 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ- புக்கிங் (Pre-booking) ஆரம்பமாகியுள்ளது. படத்தின் டிக்கெட்டானது ஜெட் வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட்டின் விலை உயர்ந்திருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் (Bengaluru) திரையரங்கு ஒன்றில் இப்படத்தின் ஆன்லைன் டிக்கெட்டின் விலை ரூ 2000 ஆக உள்ளதாம். மேலும் இப்படத்தின் டிக்கெட்டுகளை இடைத்தரகர்கள் ரூ 5000 வரை விற்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ 300 முதல் 400 வரை முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ரூ 2000 வரை பெங்களூருவில் விற்பனையாகிறதா ? என ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.




இதையும் படிங்க : கூலி படத்தில் ரஜினியின் இளமை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்? கேமியோ ரோலில் இவரா?
கூலி திரைப்படத்தின் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் ;
4 days to dive into Deva’s world! 🖤 #Coolie ⚡#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv @girishganges… pic.twitter.com/bNvFumXFmw
— Sun Pictures (@sunpictures) August 10, 2025
இந்த கூலி திரைப்படத்திற்கு பான் இந்தியா வரை பெரும் வரவேற்புகள் இருந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இப்படமானது ஏற்படுத்தி வருகிறது. தமிழ் மற்றும் மலையாள சினிமாவை அடுத்ததாக தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்புகள் கிடைத்த வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்தி சினிமாவிலும் ரசிகளிடையே வரவேற்பை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கேரளாவில் மோகன்லாலுக்கு ஈடுகொடுக்கும் ரஜினிகாந்த்.. டிக்கெட் புக்கிங்கில் வசூலை அள்ளும் கூலி படம்!
கூலி டிக்கெட் புக்கிங் வசூல் விவரம் :
இந்த கூலி படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் உருவாகியுள்ளது. மேலும் அந்தந்த மொழிகளில் பிரபல மிக்க நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் இந்த் படமானது தயாராகியுள்ளது. மேலும் இந்த் படத்தில் மோனிகா என்ற சிறப்பு பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கிறார்.
இந்நிலையில், இது மேலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். தற்போது இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை உலகளாவிய வசூலில் ரூ 11.08 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை sacnilk என்ற இணையதளம் பகிர்ந்துள்ளது.