Coolie : கேரளாவில் மோகன்லாலுக்கு ஈடுகொடுக்கும் ரஜினிகாந்த்.. டிக்கெட் புக்கிங்கில் வசூலை அள்ளும் கூலி படம்!
Coolie Movie Kerala Pre-Booking : பான் இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், கேரளாவில் வசூலை குவித்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) 171வது திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி படம் (Coolie). இந்த படத்தில் ரஜினியுடன் பான் இந்திய மொழி பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது இந்த படத்தை தயாரித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 6வது படம்தான் இந்த கூலி. இந்த படத்தில் நடிகர்கள் ஆமிர் கான் , நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர் (Soubin Shahir), உபேந்திர ராவ, ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்தியராஜ் ஏன் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்தப் படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும், பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கடந்த 2025 ஆகஸ்ட் 8ம் தேதி காலை முதல் கேரளாவில், கூலி படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கியிருந்தது. இந்த படத்தின் டிக்கெட்டை பெறுவதற்காக ரசிகர்கள் திரையரங்கில் குவிந்திருந்தனர். இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மோகன்லாலின் (Mohanlal) திரைப்படங்களுக்குக் கேரளாவில் எவ்வாறு வரவேற்பு இருக்குமோ, அதுபோல இந்தக் கூலி படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்புகள் இருந்து வருகிறதாம்.
இதையும் படிங்க : ’வீட்ல போய் நான் காலில் விழணும்’ வைரலாகும் அஜித் – ஷாலினி வீடியோ!




கூலி படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் பதிவு :
கேரளாவில் கூலி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு :
தமிழ்த் திரைப்படங்களுக்குக் கேரளாவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் இருந்து வருகிறது. குறிப்பாக தளபதி விஜய், சூர்யா மற்றும் ரஜினிகாந்த் என முக்கிய பிரபலங்களின் படங்ககளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்புகள் இருந்துவருகிறது. அந்த வகையில் ரஜினிகாந்த்தின் கூலி படமானது விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியிருக்கும் நிலையில், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் நடிகர் மோகன் லாலின் படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்புகள் கிடைக்குமோ, அதைப்போலக் கூலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகள் கிடைத்து வருகிறது.
இதையும் படிங்க : யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்தது பவர் ஹவுஸ் பாடல் – வைரலாகும் போஸ்ட்
இப்படமானது ப்ரீ புக்கிங்கில் மட்டும் இதுவரை சுமார் ரூ. 1.73 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலானது Sacnilk என்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோகன்லால் படங்கள் எவ்வாறு ரிலீசிற்கு முன் வரவேற்பைப் பெற்று வருகிறதோ, அதற்கு இணையாகக் கூலி படமானது வசூல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மோகன்லாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல் 2 எம்புரானின் ப்ரீ புக்கிங் வசூலை நெருங்குவதாகக் கூறப்படுகிறது.