Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Coolie: கூலி பட டிக்கெட் வாங்க முந்தியடித்த கேரள ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ!

Rajinikanths Kerala Fans Viral Video : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில், பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி திரைப்படம். இந்த திரைப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகக் காத்திருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் கேரளா டிக்கெட் புக்கிங் ஓபனான நிலையில், டிக்கெட்டை வாங்குவதற்காக ரசிகர்கள் முந்தியடித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Coolie: கூலி பட டிக்கெட் வாங்க முந்தியடித்த கேரள ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ!
ரஜினிகாந்த் கேரள ரசிகர்கள் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 08 Aug 2025 13:01 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில், பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி (Coolie). இந்த படமானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் (Super Star Rajinikanth) 171வது திரைப்படமாக, கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கும் அதை தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு தொடக்கம் முதல் நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்து, வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி வேடத்தில் நடிக்க, அவருடன் சவுபின் ஷாஹிர் (Soubin shahir), நாகார்ஜுனா (Nagarjuna), ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) , ஆமிர் கான், சத்ரயாஜ் மற்றும் உபேந்திரா என பல்வேறு திரை பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது.

இந்நிலையில் கேரளா (Kerala), கர்நாடகா போன்ற மாநிலங்களில் , கூலி படத்தின் டிக்கெட் புக்கிங் (Ticket booking) தொடங்கியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இணையத்தில் வீடியோ ஒன்றில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கேரளாவின் திரையரங்கு (Theater in Kerala) ஒன்றில், ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் டிக்கெட்டை பெறுவதற்காக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக முந்தியடித்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தமிழகத்திலும் இப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க : அவன் பெரு ஜடல்.. நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

இணையத்தில் வைரலாகும் கேரளா ரஜினிகாந்த் ரசிகர்கள் வீடியோ :

கூலி படத்தின் தமிழக ஆன்லைன் டிக்கெட் புக்கிங் எப்போது :

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இந்த கூலி படமானது உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆப் லைன் டிக்கெட் புக்கிங், தமிழகத்தில் சில இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : தமிழகத்தில் ரஜினிகாந்த்தின் ‘கூலி’ படத்தின் பிரீமியர் காட்சி எப்போது தெரியுமா?

மேலும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2025 ஆகஸ்ட் 9ம் தேதி அல்லது 10ம் தேதியில் கூலி படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், டிக்கெட் ப்ரீ புக்கிங்கில் கூலி படமானது சுமார் ரூ.40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.