விமானத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ!
Superstar Rajinikanth: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக கூலி படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் விமானத்தில் ஹைதராபாத்திற்கு செல்லும் போது பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரஜினிகாந்த் எழுந்து நின்று வணக்கம் வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இதில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் அமீர் கான், சௌபின் ஷாகிர், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, சத்யராஜ், உப்பேந்திரா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 2-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. முன்னதாக வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா உடன் நேற்று ஹைதரபாத்திற்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தலைவா முகத்த மட்டும் காட்டுங்க என்று கத்த, ரஜினிகாந்த் தனது சீட்டில் இருந்து எழுந்து நின்று அனைவருக்கும் கை அசைத்துவிட்டு வணக்கம் சொல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




Also Read… யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்தது என்ன சுகம் பாடலின் லிரிக்கள் வீடியோ
இணையத்தில் வைரலாகும் நடிகர் ரஜினிகாந்தின் வீடியோ:
When a Fan asked ‘Thalaiva Face Paakanum’ & see what Superstar #Rajinikanth does❤️🔥🫶pic.twitter.com/ePmqCtOXjy
— AmuthaBharathi (@CinemaWithAB) August 7, 2025
நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த உடனே அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் உடனே கலந்துகொண்டார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து இளம் நடிகர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு நடிகர் ரஜினிகாந்த் ப்ரேக் விடாமல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.