விராட் கோலியைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு சிறுமியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 9Gag பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், oyeenikita என்ற பெயரில் அறியப்படும் அந்த சிறுமி கதவுக்குப் பின்னால் மறைய முயன்றாலும், அருகிலிருந்த கண்ணாடியில் அவள் முழு அசைவுகளும் தெளிவாக தெரிந்துவிடுகிறது. ஆனால் இந்த வீடியோவில் அந்த சிறுமியின் முகம் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் சிறுவயது புகைப்படங்களை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். “யங் விராட் போல இல்லையா?” என ஒருவர் கேட்டதுடன், “வாமிகா கோலி நீயா?” என்றும் சிலர் நகைச்சுவையாக எழுதியுள்ளனர்.