Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சொன்ன தேதியில் ஜனநாயகன் வெளியாகாததற்கு என்ன காரணம்? தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ

Jana Nayagan Producer Apologizes : நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைத்துறை சான்றிதழ் வழங்காத காரணத்தால் திட்டமிட்டபடி பொங்கலுக்கு அந்தப் படம் வெளியாகாவில்லை. இந்த நிலையில் அதற்கான காரணத்தை தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் காணொலி வாயிலாக தெரிவித்துள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.

சொன்ன தேதியில் ஜனநாயகன் வெளியாகாததற்கு என்ன காரணம்? தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ
ஜனநாயகன் பட சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் விளக்கம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Jan 2026 07:57 AM IST

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9, 2026 அன்று வேண்டிய நடிகர் விஜய்யின் (Vijay) கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்னையால் திட்டமிட்டபடி வெளியாவவில்லை. இது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஜனவரி 21, 2026 அன்று தள்ளி வைத்துள்ளது. இதனால் பொங்கலுக்கு படம் வெளியாகாது என்பதால்,  தணிக்கைத்துறையின் இத்தகைய நடவடிக்கையை திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் படம் சொன்ன தேதியில் வெளியாகாத நிலையில் தயாரிப்பாளர் வெங்கட் நாராயாணன் ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்டு ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்ட தயாரிப்பாளர்

அந்த வீடியோவில் பேசிய அவர், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்., கடந்த சில நாட்களாக பல்வேறு அழைப்புகள் மற்றும் செய்திகளும் கிடைத்தன. அவை படத்தின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பை உணர்த்துகின்றன.. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், சில விஷயங்களை முழுமையாக வெளிப்படுத்த முடியாத சூழல் இருக்கிறது. ஜனநாயகன் படம் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி தணிக்கை வாரியத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதையும் படிக்க : பராசக்தியில் அண்ணாவின் வசனம் நீக்கம்… சென்சாரில் 25 கட் – என்னென்ன காட்சிகள் நீக்கம்?

இந்த நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி சில மாற்றங்களை செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்பின்னர் யுஏ 16 பிளஸ் சான்றிதழ் வழங்கப்படும் என மின்னஞ்சல் மூலம் தகவல் வந்தத நிலையில், தணிக்கை வாரியம் கூறிய அனைத்து திருத்தங்களையும் செய்து மீண்டும் படத்தை சமர்ப்பித்தோம். இருப்பினும், எதிர்பார்த்தபடி சான்றிதழ் வழங்கப்படவில்லை. எங்கள் தரப்பில் தொடர்ந்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகாததற்கு காரணம் என்ன?

படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன், 2026, ஜனவரி 5 ஆம் தேதி மாலை, யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டதாக தகவல் கிடைத்தது. புகார் அளித்தவர் யார் என்பது தெரியாததால் உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை உருவானது.

இதையும் படிக்க : ஜன நாயகன் படத்திற்கு யு/ஏ வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவிற்கு தலைமை நீதிபதி அமர்வு தடை

மேலும், 2026 ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணைக்கு பின்னர் யுஏ 16 பிளஸ் சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதற்கு தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்ததால் அந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதற்கு ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். விரைவில் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அவர் பேசினார்.