Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பராசக்தியில் அண்ணாவின் வசனம் நீக்கம்… சென்சாரில் 25 கட் – என்னென்ன காட்சிகள் நீக்கம்?

Parasakthi Faces Censor Cutsச சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் இந்தி திணிப்பிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள பராசக்தி படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் அண்ணா பேசும் வசனங்கள் உட்பட 25 காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது.

பராசக்தியில் அண்ணாவின் வசனம் நீக்கம்… சென்சாரில் 25 கட் – என்னென்ன காட்சிகள் நீக்கம்?
சேத்தன் - சிவகார்த்திகேயன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Jan 2026 17:55 PM IST

சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வருகிற ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் பராசக்தி (Parasakthi). கடந்த 1960களில் தமிழ்நாட்டில் ஹிந்தி திண்ப்பிற்கு எதிராக மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வெளியாக ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இதுவரை இந்தப் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. ஜனநாயகன் படத்தை போலவே இந்தப் படத்துக்கும் வழங்கப்படாததால் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி இந்தப் படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

படத்தில் அண்ணா பேசும் வசனம் நீக்கம்

பராசக்தி படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியான நிலையில் அதில், 25  காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக படத்தின் டாக் லைனான தீ பரவட்டும் என்பதை நீதி பரவட்டும் என மாற்றப்பட்டுள்ளது. அதே போல படத்தில் பேரறிஞர் அண்ணாவாக சேத்தன் நடித்துள்ளார். அவரது கதாப்பாத்திரம் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. டிரெய்லரில் அண்ணா பேசுவதாக இடம் பெற்றுள்ள, இத பண்ணவன் யாரா இருந்தாலும் அவன் என் தம்பி என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : Sivakarthikeyan: ரவி மோகன் சார் வெரி வெரி பேட் பாய்.. நிகழ்ச்சியில் கலகலப்பாக பேசிய சிவகார்த்திகேயன்!

பராசக்தி படத்தில் நீக்கப்பட்ட வசனங்கள்

  • சென்சார் சான்றிதழில் உள்ள தகவலின் படி பராசக்தி ‘இந்தி என் கனவை அழித்தது’ என்ற வசனம், ‘என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது’ என மாற்றப்பட்டுள்ளது.
  • அதே போல ‘இந்தி அரக்கி’ என்ற போர்டு உள்ள காட்சி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் ‘இந்தி’ என்ற வார்த்தை சப் டைட்டிலில் சில இடங்களில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • துப்பாக்கி சூட்டில் தன் குழந்தையுடன் தாய் இறந்து போகும் காட்சி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு மொழியை திணிப்பது, அந்நாட்டின் சிதைவுக்கு வழிவகுக்கும் என்பது வாய்ஸ் ஓவரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • தீ பரவட்டும்’ என்ற வாசகம் நீதி பரவட்டும் என மாற்றம்

இதையும் படிக்க : தள்ளிப்போன ஜன நாயகன்… ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படங்கள்!

என இப்படி பராசக்தி படத்தில் மொத்தம் 25 இடங்களில் திருத்தம் செய்ய படக்குழு ஒப்புக்கொண்ட நிலையில் படத்துக்கு யு/ஏ சன்றிதழ் வழங்கி மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அண்ணா தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம் ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நீதிபதி ஆஷாவின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வழக்கின் விசாரணையை ஜனவரி 21, 2026 அன்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படம் பொங்கலுக்கு வெளியாகாது என்பதால் ரசிகர்கள் வருத்ததில் உள்ளனர்.