என்னை அடிச்சாங்க, திட்டுனாங்க… ஜெயலலிதா குறித்து ஆவேச பேச்சு… முதன்முறையாக மனம்திறந்த ரஜினிகாந்த்.
Rajinikanth Recalls Shocking 1995 Incident: இயக்குநர், நடிகர் பாக்யராஜ் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் ஜெயலலிதா குறித்து ஆவேசமாக பேசியதால் சிலர் தன்னை தலையில் அடித்ததாக குறிப்பிட்டுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர், இயக்குநர், இந்தியாவின் சிறந்த திரைக்கதாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர் கே.பாக்யராஜ். பாரதிராஜாவின் (Bharathiraja) உதவி இயக்குநராக திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர், பாரதிராஜாவின் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்த நிலையில் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கி நடித்த படம் தான் சுவரில்லாத சித்திரங்கள் அவருக்கு இயக்குநராகவும் நடிகராகவும் பெயர் வாங்கி கொடுத்தது. இந்த நிலையில் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவர் திரையுலகினர் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
ரஜினிகாந்த் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்
நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த், ”கடந்த 1995 ஆம் ஆண்டு சிவாஜி சாருக்கு செவாலியே விருது கொடுத்ததுக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரையுலகமும் அரசும் சேர்ந்து பாராட்டு விழா நடத்தினார்கள். அன்றைய நிகழ்வில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் நான் பேசும்போது, முதல்வரை பார்த்து ஆவேசமாக பேசினேன் என்றார்.




இதையும் படிக்க : துல்கர் சல்மானிடம் ஒரு காதல் கதை சொன்னேன்… ஆனால் – சுதா கொங்கரா ஓபன் டாக்
மேலும் பேசிய அவர், அப்படி நான் ஆவேஷமா பேசியபோது, முதல்வருக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்தவர்களின் முகம் மாறியது. பின்னர் ஓபன் ஜீப்பில் சிவாஜியை ரசிகர்கள் முன்னாடி வளம் வர ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் அதில் ஏறியபோது விஜயகுமார் வேண்டாம் என்று சொன்னார். இதில் என்ன என்று நானும் ஏறிவிட்டேன். அந்த ஜீப்பில் நான்போகும்போது சிலர் கல்லால் அடித்தார்கள். என்னை பார்த்து சிலர் கத்தினார்கள். அப்போது பாட்ஷா படம் வெளியாகி வெற்றிபெற்றிருந்ததால், சில ரசிகர்கள், ஆட்டோகிராப் வாங்க வந்திருந்தார்கள்.
காப்பாற்றிய பாக்யராஜ்
அவர்களுக்கு ஆட்டோகிராஃப் கொடுத்து முடிப்பதற்குள் எல்லா நடிகர்களும் பேருந்தில் ஏறி சென்று விட்டார்கள். எனக்கு எப்படி போவது என்று தெரியவில்லை. ஒரு சிலர் இங்க போ, அங்க போ என சொல்கிறார்கள். சிலர் என்னை தலையில் அடிக்கிறார்கள். கிள்ளுகிரார்கள். சிலர் என்னைப் பார்த்து திட்டுகிறார்கள். அப்போ ஒரு குரல் கேட்டது. அட யாரென்று பார்த்தால் நம் பாக்யராஜ்.
இதையும் படிக்க : ஸ்டாண்ட் வித் விஜய் அண்ணா… இணையத்தில் வைரலாகும் ரவி மோகனின் பதிவு
அவர் அருகில் இருந்த காவல்துறையினரிடம், சத்தம் போட்டு, ஒரு நடிகரிடம் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள், சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க, ஒழுங்கா அவரை ஜீப்ல அலைச்சிட்டு போய் வீட்ல விடுங்க, இல்லைன்னா உங்கள விடமாட்டேன், மீடியாவுல சொல்லிடுவேன் என்றார். அவர் பேசியதை கேட்டதும் உடனடியாக அவர்கள் என்னை ஜீப்பில் அழைத்துக் கொண்டு போய் பாதுகாப்பாக் வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். இதை என்னால் மறக்கவே முடியாது என்று அவர் பேசினார்.