Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜனநாயகனைத் தொடர்ந்து பராசக்தி வெளியாவதிலும் சிக்கல் – ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு?

Parasakthi Censor Issue: தளபதி விஜய்யின் ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் தொடர்பான பிரச்னையின் காரணமா ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே U/A சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சான்றிதழ் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்லது.

ஜனநாயகனைத் தொடர்ந்து பராசக்தி வெளியாவதிலும் சிக்கல் – ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு?
சிவகார்த்திகேயன் - விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Jan 2026 22:50 PM IST

தளபதி விஜய்யின் ஜனநாயகன் (Jana Nayagan) சென்சார் சான்றிதழ் தொடர்பான பிரச்னையின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே U/A சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சான்றிதழ் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்லது. ஜனவரி 8, 2025 அன்று சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால் பராசக்தி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஜனநாயகனைத் தொடர்ந்து பராசக்தி படத்துக்கும் சென்சாரில் பாதிப்பு

ஜனநாயகனைத் தொடர்ந்து பராசக்தி திரைப்படத்துக்கும் இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பராசக்தி படம் மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்பப்பட்டு உறுப்பினர்கள் படம் பார்த்த பிறகு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஒருவேளை ஜனவரி 8, நாளை படத்துக்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால் ஜனநாயகனைப் போல பராசக்தியும் ரீலிஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் படக்குழு தீவிர புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : ஜனநாயகன் படத்துக்கு சென்சாரில் ஏற்பட்ட குழப்பம் இவைதான்.. சிக்கல்களை அடுக்கிய வழக்கறிஞர்!

பராசக்தி படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தின் எக்ஸ் பதிவு

 

பராசக்தி படத்தில் பேசில் ஜோசஃப்

கேரளாவில் தற்போது படக்குழு பராசக்தி படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பேசிய சிவகார்த்திகேயன், பிரபல மலையாள இயக்குநரும் நடிகருமான பேசில் ஜோசஃப் பராசக்தியில் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தான் பேசில் ஜோசஃப்பின் மிகப்பெரிய ரசிகன். அவர் இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இந்தப் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. பராசக்தி படக்குழுவில் அவரிடம் தான் அதிகம் பேசினேன். இலங்கையில் படப்பிடிப்பு நடந்தபோது, 3 நாட்கள் அங்கே தங்கியிருந்தார். என்று பேசினார்.

இதையும் படிக்க : Sreeleela: நான் முழு மனதோடு ஆதரிப்பேன் – ஜன நாயகன் படம் குறித்து பேசிய ஸ்ரீலீலா!

பராசக்தி திரைப்படம் கடந்த 1960களில் நடந்த ஹிந்தி திணிப்பிற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்தப் படம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு 100வது படம் என்பதும், சிவகார்த்திகேயனுக்கு 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.