Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜனநாயகன் படத்துக்கு சென்சாரில் ஏற்பட்ட குழப்பம் இவைதான்.. சிக்கல்களை அடுக்கிய வழக்கறிஞர்!

Jananayagan Censor Issue: ஜனநாயகன் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தங்களுக்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி ஜனநயாகன் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை  ஜனவரி 7, 2026 இன்று விசாரணைக்கு வந்தது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜனநாயகன் படத்துக்கு சென்சாரில் ஏற்பட்ட குழப்பம் இவைதான்.. சிக்கல்களை அடுக்கிய வழக்கறிஞர்!
ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Jan 2026 17:06 PM IST

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வருகிற ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாதது சர்ச்சையாகியிருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் எனவும், விஜய்யின் (Vijay) அரசியல் வருகையை முடக்க, வேண்டுமென்றே படத்துக்கு சிக்கல் அளிப்பதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஜனநாயகன் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தங்களுக்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி ஜனநயாகன் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை  ஜனவரி 7, 2026 இன்று விசாரணைக்கு வந்தது.

ஜனநயாகன் படத்தில் சென்சாரில் என்ன பிரச்னை?

இது தொடர்பாக மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஜனநாயகன் படத்தில் ராணுவ படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால், அத்துறை நிபுணரிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். சென்சார் பரிசீலனைக் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவால் ஜனநாயகன் படம் மறுபடி பார்க்கப்பட வேண்டும். ஒரு திரைப்படத்தை தணிக்கை குழு பார்வையிட்ட பிறகும், அதனை மறுதணிக்கைக்கு உத்தரவிட தணிக்கை குழு தலைவருக்கு அதிகாரம் உண்டு என்றார். 

இதையும் படிக்க : விஜய் வெர்ஷனில் என்னை தாலாட்டும் சங்கீதம் பாடல்… இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட வீடியோ

மேலும் பேசிய அவர், மறுதணிக்கை குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் அனுப்பினோம். 14 காட்சிகளை நீக்க ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது மறுதணிக்கை செய்ய வேறு ஐவர் குழுவுக்கு அனுப்பலாம். தணிக்கை குழு தலைவர், ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தி அடையவில்லை என்றால், திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறுதணிக்கை குழுவிற்கு அனுப்பலாம்.

முதல் தணிக்கை குழுவில் இருந்து 5 பேர் மறுதணிக்கை குழுவில் இருக்கமாட்டார்கள். வேறு ஐவர் இருப்பர்.  நாளை மறுதினம் படம் ரிலீஸ் எனக்கூறி சென்சார் சான்று கேட்க முடியாது. கடந்த மாதம் 18ம் தேதிதான் படக்குழு விண்ணப்பித்துள்ளது. விதிகளின் படியே நாங்கள் முடிவெடுக்க முடியும் சென்சார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இவ்வாறு தனது வாதத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதையும் படிக்க : Sreeleela: ரேஸ்-னா ரொம்ப பிடிக்கும்… நான் அவரின் மிகப்பெரிய ரசிகை- உற்சாகமாக பேசிய ஸ்ரீலீலா!

நாளை தீர்ப்பு

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனவரி 9,2026 அன்று படம் வெளியீடு என்பதை முன்பே அறிவித்துவிட்டு சென்சார் சான்று கோரி டிசம்பர் 18, 2025 அன்று விண்ணப்பித்தோம் என்றார். இதனை கேட்ட நீதிபதி ஆஷா, முன்பே வெளியீட்டுத் தேதி சொன்னாலும், தணிக்கை வாரியத்தின் டைம்லைனை பின்பற்றி ஆக வேண்டும். மேலும், இந்த வழக்கில் ஜனவரி 8, 2026 நாளை தீர்ப்பு வழங்கப்படும் என வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.