Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Parasakthi: சார்ட் டைம் ஹிட்… யூடியூப்பில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்த பராசக்தி பட ட்ரெய்லர்!

Parasakthi Trailer Views: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பெண் இயக்குனராக இருப்பவர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகி காத்திருக்கும் படம்தான் பராசக்தி. இப்படத்தின் ட்ரைலர் கடந்த 2026 ஜனவரி 4ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், தற்போது யூடியூப்பில் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Parasakthi: சார்ட் டைம் ஹிட்… யூடியூப்பில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்த பராசக்தி பட ட்ரெய்லர்!
பராசக்தி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Jan 2026 12:59 PM IST

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை மையமாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். இந்த படமானது இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் அமைந்துள்ள நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இப்படமானது மிகவும் பிரம்மாண்டமாகவே தயாராகியுள்ளது. இப்படமானது கடந்த 1964ம் ஆண்டில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 2026 ஜனவரி 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், கடந்த 2026 ஜனவரி 4ம் தேதியில் மாலையில் பராசக்தி படத்தின் ட்ரெய்லர் (Parasakthi Trailer) வெளியாகியிருந்தது.

இந்த ட்ரெய்லர் வெளியாகி 2 நாட்களை கடந்த நிலையில், யூடியூப்பில் இதுவரை சுமார் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாம். இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்த சர்ச்சையும் இணையத்தில் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனுஷின் D 56 படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்? வைரலாகும் தகவல்

பராசக்தி பட ட்ரெய்லர் பார்வைகள் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

பராசக்தி பட சென்சார் அப்டேட் :

பராசக்தி படமானது வரும் 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கான டிக்கெட் ப்ரீ புக்கிங் தமிழகத்தில் சிறப்பாகவே தொடங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகியுள்ள நிலையில், பான் இந்திய அளவிற்கு பெரிய படமாக தயாராகியுள்ளது. இப்படம் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. மேலும் இப்படம் இந்தி மொழியில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: படையப்பா ரீ-ரிலீஸ் வெற்றி.. ரஜினிகாந்தை சந்தித்து கொண்டாடிய படக்குழு!

சமீபகாலமாக சென்சார் பிரச்சனை தொடர்ந்து நடந்துவருகிறது. இதில் ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. படம் இன்னும் 2 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், எப்போது சென்சார் வாழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த் பராசக்தி படத்திற்கும் இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இன்று 2026 ஜனவரி 7ம் தேதிக்குள் படக்குழு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.