Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Padayappa: படையப்பா ரீ-ரிலீஸ் வெற்றி.. ரஜினிகாந்தை சந்தித்து கொண்டாடிய படக்குழு!

Padayappa Re-release Success Meet: ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டில் வெளியான படம்தான் படையப்ப. இப்படம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2025 டிசம்பர் 12ம் தேதியில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இப்படமானது ரீ ரிலீஸில் சாதனை படைத்துள்ள நிலையில், இதை படக்குழு ரஜினிகாந்துடன் இணைந்து கொண்டாடியுள்ளனர்.

Padayappa: படையப்பா ரீ-ரிலீஸ் வெற்றி.. ரஜினிகாந்தை சந்தித்து கொண்டாடிய படக்குழு!
ரம்யா கிருஷ்ணன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரஜினிகாந்த்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Jan 2026 19:53 PM IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் மட்டுமே இதுவரை கிட்டத்தட்ட 171 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவரின் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் (K.S.Ravikumar) இயக்கத்தில் வெளியான படம்தான் படையப்பா (Padayappa). இந்த படத்தில் ரஜினிகாந்த் அதிரடி வேடத்தில் நடித்திருந்த நிலையில், நடிகர்கள் சௌந்தர்யா (Soundarya), ரம்யா கிருஷ்ணன் (Ramya krishnan), சிவாஜி கணேசன் (Shivaji Ganeshan) மற்றும் செந்தில் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது கடந்த 1999ல் வெளியாகியிருந்த நிலையில், மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. அப்போதே திரையரங்குகளில் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேலாக திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த 2025 டிசம்பர் 12ம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது.

ரஜினிகாந்தின் 50வது வருட சினிமா பயணம், படையப்பா படம் வெளியாகி 25 ஆண்டுகள் மற்றும் ரஜினிகாந்தி 75வது போன்ற சிறப்பான விஷயங்கள் காரணமாக படையப்பா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படமானது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதை படக்குழு கொண்டாடியுள்ளது.

இதையும் படிங்க: இன்று பிறந்த நாள் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்… வாழ்த்தும் பிரபலங்கள்

ரஜினிகாந்தை சந்தித்த படையப்பா படக்குழு குறித்த பதிவு :

இந்த படையப்பா படத்தை ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ரீ-ரிலீஸ் செய்திருந்தார். ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் ரீ-ரிலீஸ் ஆகியிருந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்களும் திரையரங்குகள் சென்று இப்படத்தைப் பார்த்திருந்தார். அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டி ரீ-ரிலீஸான படங்களிலே அதிகமாக வசூல் செய்த படம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உட்பட படையப்பா படக்குழு ரஜினிகாந்தை சந்தித்துள்ளனர்.

இதையும் படிங்க: பராசக்தி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நல்ல பெண்ணால் ரொம்ப பாதுகாப்பாக உணர்ந்தேன் – சுதா கொங்கரா குறித்து பாராட்டி பேசிய ரவி மோகன்

சந்தித்து படையப்பா படத்தின் வெற்றியை இணைந்து கொண்டாடியது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. படையப்பா படத்தை அடுத்தாக ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களுக்கு பின் ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் இணைந்த நிலையில், தற்போது உருவாகிவரும் ஜெயிலர் 2 படத்திலும் இவர் மீண்டும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.