Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்… வாழ்த்தும் பிரபலங்கள்

Music composer AR Rahman : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றது.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்… வாழ்த்தும் பிரபலங்கள்
ஏ.ஆர்.ரஹ்மான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jan 2026 17:32 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது உலக அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பல படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். பல முன்னணி நடிகர்களும் இயக்குநர்களும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தங்களது படங்களில் இசையமைக்க வேண்டும் என்று காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது இசையில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. தொடர்ந்து இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனை தற்போது பார்க்கலாம்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து சொன்ன மாரி செல்வராஜ்:

பேரன்பும் பெருமதிப்பும் மிக்க நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து சொன்ன கே.எஸ்.சித்ரா:

May your rhythm of life keep beating to the melodies tunes. Keep stealing hearts with your songs. Wishing you a very Happy Birthday Rahman @arrahman Ji#ARRahman #Birthday #Rahman pic.twitter.com/TKZIuUN5zb

— K S Chithra (@KSChithra) January 6, 2026

உங்கள் வாழ்க்கை லயம் எப்போதும் இனிய மெல்லிசைகளுக்கு ஏற்பத் துடிக்கட்டும். உங்கள் பாடல்களால் தொடர்ந்து இதயங்களைக் கவர்ந்து வாருங்கள். ரஹ்மானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பாடகி கே.எஸ்.சித்ரா தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து சொன்ன சிரஞ்சீவி:

உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் இசை எப்போதும் உலகிற்கு ஒரு காலத்தால் அழியாத பரிசாக இருந்து வருகிறது; அது நம் அனைவரின் உள்ளத்திலும் ஆழமாகப் பதியும் வெற்றிப் பாடல்களை உருவாக்கியுள்ளது. நல்வாழ்த்துக்கள், மேலும் பல ஆண்டுகளுக்கு உங்கள் இசையின் மூலம் நீங்கள் மகிழ்ச்சியைத் தொடர்ந்து பரப்ப வேண்டும் என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து சொன்ன ராம் சரண்:

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சார். இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எல்லையற்ற இசையைக் கொண்டுவரட்டும் என்று நடிகர் ராம் சரண் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.