Suriya: தனது குட்டி ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Suriya viral video : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாக கலக்கிவருபவர் சூர்யா. இவர் தற்போது சூர்யா47 படத்தில் பிசியாக இருந்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது குட்டி ரசிகருக்கு சப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். அவரை சர்ப்ரைஸாக சந்தித்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவருக்கு தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்துவந்த இவர், தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி இயக்குநர்களுடனமும் புது படங்களில் இணைந்து நடித்துவருகிறார். அப்படி உருவாகிவரும் படங்கள்தான் சூர்யா46 (Suriya46) மற்றும் சூர்யா47 (Suriya47). இதில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கிய சூர்யா46 படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. மேலும் மலையாள இயக்குநர் ஜித்து மாதவனின் (Jithu Madhavan) இயக்கத்தில் சூர்யா47 என்ற படத்தில் இவர் நடித்துவருகிறார்.
இந்த படத்தின் புரோமோ ஷூட் முடிந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முடித்த கையேடு சூர்யா இப்படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகர் சூர்யா தனது குட்டி ரசிகரை சர்ப்ரைஸாக சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: மை நியூ லுக்… இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்ட இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!
குட்டி ரசிகரை சர்ப்ரைஸாக சந்தித்த சூர்யாவின் வீடியோ பதிவு :
A Cute video of #Suriya surprising his kutty fan..❣️👌 He’s Gearing up for #Suriya47 shoot after Pongal..⭐pic.twitter.com/3JpjhJ4rhW
— Laxmi Kanth (@iammoviebuff007) January 5, 2026
இந்த வீடியோவில் ஒரு சிறுவன் தனது குடும்பத்துடன் இருக்கும்படி இருக்கிறது. அதில் அந்த சிறுவனின் தந்தை அவரின் கண்ணை மறைகிறார். உடனே கதவு வழியாக என்ட்ரி கொடுத்த சூர்யா, அந்த குட்டி ரசிகரை சந்தித்தார். இதில் பெரும் மகிழ்ச்சியான அந்த குட்டி ரசிகர் அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது :
நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் கூட்டணியில் உருவான படம் கருப்பு. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து கிட்டத்தட்ட 7 மாதங்களை கடந்த நிலையில், இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து சூர்யா தனது 46வது படத்தின் ஷூட்டிங்கையும் முடித்துவிட்டார். அந்த விதத்தில் இந்த படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி லாக் ஆகவில்லை.
இதையும் படிங்க: சுதா கொங்கரா ஷூட்டிங்கில் எப்போதுமே அப்படித்தான் பேசுவாங்க.. ஒண்ணுமே புரியாது – கலகலப்பாக பேசிய சிவகார்த்திகேயன்!
மேலும் வட்டாரங்கள் கூற்றுப்படி இப்படம் 2026 ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீசிற்கு பிறகுதான் தெலுங்கில் சூர்யா நடித்துள்ள சூர்யா46 படமும் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆகையால் இந்த 2026ல் சூர்யாவின் நடிப்பில் இரு படங்கள் வெளியாகுவது உறுதி.