Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்னை வைத்து காமெடி பண்ணுகிறார்களா? ராஜா சாப் படத்திற்கு அணுகியபோது நான் நம்பவில்லை – மாளவிகா மோகனன்!

Malavika Mohanan About The Raja Saab: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் மாளவிகா மோகனன். இவரின் நடிப்பில் வரும் 2026 ஜனவரி 9ம் தேதி முதல் வெளியாகவுள்ள பான் இந்திய படம்தான் தி ராஜா சாப். இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், இதில் எவ்வாறு கதாநாயகியாக நுழைந்தேன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

என்னை வைத்து காமெடி பண்ணுகிறார்களா? ராஜா சாப் படத்திற்கு அணுகியபோது நான் நம்பவில்லை – மாளவிகா மோகனன்!
மாளவிகா மோகனன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Jan 2026 20:35 PM IST

தெலுங்கு மொழியில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் தி ராஜா சாப் (The Raja saab). இந்த படத்தில் பிரபல நாயகன்  பிரபாஸ் (Prabhas) நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகைகள் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), நிதி அகர்வால் (Nidhi Agarwal), ரித்தி குமார் என மொத்தம் 3 நடிகைகள் நடித்துள்ளனர். பிரபாஸின் இப்படத்தை இயக்குநர் மாருதி இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் 2026 ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் நிலையில், தமிழில் மட்டும் 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகிறது. அந்த வகையில் இந்த படத்தின் 2 ட்ரெய்லர்களும் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை மாளவிகா மோகனன், இந்த படத்தில் எவ்வாறு கதாநாயகியாக வாய்ப்பு பெற்றார் என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார். மேலும் இந்த தி ராஜா சாப் தனது முதல் அறிமுக தெலுங்கு படம் என்ற நிலையில், அது குறித்தும் மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: அமேசான் ப்ரைம் வீடியோவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது பகவந்த் கேசரி

தி ராஜா சாப் படத்தில் கதாநாயகியானது குறித்து மாளவிகா மோகனன் பேச்சு:

அதில் பேசிய மாளவிகா மோகனன், ” நான் தளபதி விஜய் சாரோட மாஸ்டர் படத்தில் நடித்திருந்தேன். அந்த படமானது சூப்பர் ஹிட்டாகியிருந்தது. அந்த படத்தை முடித்த சில நாட்களிலே எனக்கு ஒரு கால் வந்தது. பிரஷாந்த் நீல் சாரிடம் இருந்து. சலார் படத்தில் கதாநாயகியாக நடிக்க விரும்புக்கிறீர்களா? என கேட்டிருந்தார். அந்த படத்தில் லீட் கதாநாயகி வேடத்தில் நடிக்க அழைத்திருந்தார். மேலும் நானும், அவரும் சந்தித்தோம். மேலும் என்னால் சரியான தேதி இல்லாத காரணத்தால் அப்படத்தில் நடிக்கமுடியவில்லை. இந்த சந்திப்பிற்கு பின் ஒரு 6 வாரங்களுக்கு பின் மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. இதுபோல பிரபாஸ் சாரின் படத்தில் நீங்க நடிக்கவேண்டும் என்று, நானும் உடனே அவர் அப்போதுதான் சலார் மற்றும் கல்கி போன்ற படங்களில் மட்டுமே கமிட்டாகியிருந்தார். நானும் வேறு எதாவது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாரா பிரபாஸ்? என இணையத்தில் தேடி பார்த்தேன்.

இதையும் படிங்க: நெருங்கிய ரிலீஸ் தேதி.. இன்னும் வழங்கப்படாத சென்சார் – நீதிமன்றத்தை நாட ஜன நாயகன் படக்குழு ஆலோசனை?

அப்படி எதுவுமே தெரியவில்லை. உடனே நான், என்னை யாரோ ஏமாற்றுகிறார்கள் என நினைத்தேன். உடனே இயக்குநர் மாருதி சார் உண்மையிலே பிரபாஸ் சாருக்கு உங்களை ஜோடியாக ஒரு படத்திற்காக அணுகுகிறேன். நேரில் சந்திக்கலாம் என  கேட்டிருந்தார். அதன் பிறகு அவரை சந்தித்தேன். மேலும் இந்த ராஜா சாப் படம் எனது தெலுங்கு மொழி அறிமுக படமாக அமைந்தது. சலார் படத்தில் விட்டதை இதில் பிடித்துவிட்டேன். மேலும் நானும் பிரபாஸ் சாரின் மிகப்பெரிய ரசிகைதான்” என அவர் தெரிவித்திருந்தார்.