தனுஷின் D 56 படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்? வைரலாகும் தகவல்
D 56 Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களில் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தனுஷின் நடிப்பில் உருவாக உள்ள 56-வது படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது ஹாலிவுட் வரை பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் சினிமாவில் அறிமுகம் ஆன போது இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று கிண்டலடித்தவர்கள் அனைவரும் வாயடைத்து போகும் அளவிற்கு நடிப்பில் தனது அசுர வளர்ச்சியைக் காட்டினார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா, இட்லி கடை மற்றும் தேரே இஸ்க் மெய்ன் ஆகிய மூன்று படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் இந்த ஆண்டிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் தற்போது 54-வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து தனுஷ் தனது 55-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி உடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் 56-வது படத்திற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் கூட்டணி வைத்துள்ளார்.




தனுஷ் 56 படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்:
இந்த நிலையில் இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் மாரி செல்வராஜ் அந்த பதிவில் டி56 படத்தையும் குறிப்பிட்டு இருந்தார். இதன் கரணமாக அந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
பேரன்பும் பெருமதிப்பும் மிக்க நம் இசைப்புயல் @arrahman சார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் 💐❤️ #HappyBirthdayARR #D56 pic.twitter.com/mgIefTyYwq
— Mari Selvaraj (@mari_selvaraj) January 6, 2026
Also Read… Jana Nayagan: ஜன நாயகன் பட சென்சார் பிரச்சனை.. வழக்கை நாளைக்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!