Rishabh Shetty: ஜன நாயகன் ட்ரெய்லர் ஃபயர்… பராசக்தி ட்ரெய்லர் அற்புதம் – பாராட்டிய ரிஷப் ஷெட்டி!
Rishabh Shetty Praises Jana Nayagan And Parasakthi Trailers:தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் நடிப்பில் இறுதியாக காந்தாரா சாப்டர் 1 படம் வெளியாகி மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் ஜன நாயகன் மற்றும் பராசக்தி பட ட்ரெய்லரை பார்த்த இவர் அதை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty) நடிப்பிலும், இயக்கத்திலும் இறுதியாக வெளியான திரைப்படம் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்த நிலையில், மிக பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. கன்னட சினிமாவில் இதற்கு முன் இவர் பல படங்களில் பணியாற்றியிருந்தாலும், இவருக்கு அதிக வசூல் மற்றும் வரவேற்பை கொடுத்த படமாக இந்த காந்தாரா சாப்டர் 1 அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்து. தற்போது ஜெய் ஹனுமான் (Jai Hanuman) மற்றும் சத்ரபதி சிவாஜி (Chhatrapati Shivaji Maharaj) போன்ற திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த இரு படங்களில் ஷூட்டிங்கும் விரைவில் துவங்குகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஜன நாயகன் (Jana Nayagan) மற்றும் பராசக்தி (Parasakthi) பட ட்ரெய்லர்களைப் பார்த்த ரிஷப் ஷெட்டி, அதை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: வளர்ச்சி என்பது வசூல் ரீதியாக அல்ல, கதை விஷயத்தில் இருக்க வேண்டும் – இயக்குநர் சிதம்பரம்




ஜன நாயகன் மற்றும் பராசக்தி திரைப்படத்தை பாராட்டி நடிகர் ரிஷப் ஷெட்டி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி :

இந்த பதிவில் முதலில் பராசக்தி திரைப்படத்தைபாராட்டியிருந்தார், அதில் ரிஷப் ஷெட்டி, பராசக்தி ட்ரெய்லர் மிகவும் அற்புதமாக வந்துள்ளது. சிவகார்த்திகேயன், ரவிமோகன் மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாவதாக தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட ட்ரெய்லரையும் பார்த்து பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு நான் நாலு கதை சொல்லியிருக்கேன்.. – மிஷ்கின் சொன்ன விஷயம்!
அதில் அவர் ஜன நாயகன் பட ட்ரெய்லர் நெருப்பாக இருக்கிறது. அதில் விஜய் சாருக்கு எனது வாழ்த்துக்கள், மேலும் நல்ல வரவேற்பை பெறவேண்டும் என படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
ரிஷப் ஷெட்டியின் புது படங்கள் :
நடிகர் ரிஷப் ஷெட்டி, தற்போது கிட்டத்தட்ட 3 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் இந்தி மொழியில் தயாராகிவரும் புது படங்கள்தான் ஜெய் ஹனுமான் மற்றும் சத்ரபதி சிவாஜி மகராஜ். இந்த இரு படங்களும் வரலாற்று புனைகதைகளை மையமாக கொண்டு உருவாகிவருகிறது. மேலும் 3வது காந்தாரா சாப்டர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் காந்தாரா 1 படத்தின் தொடர்ச்சியாக உருவாகாவுள்ளது. இப்படம் வரும் 2028ம் ஆண்டில் வெளியாகும் என கூறபடுகிறது.