Rishabh Shetty: காந்தாரா சாப்டர் 1-னை இயக்க காரணம் இதுதான்.. அந்த மாதிரியான படங்களில் ஆர்வம் அதிகம் – ரிஷப் ஷெட்டி!
Rishabh Shetty About Kantara Chapter 1:தென்னிந்திய சினிமாவில் தனது இயக்கத்தில் வெளியான 2 படங்களின் மூலம், உலக பிரபலத்தை பெற்றவர் ரிஷப் ஷெட்டி. இவரின் நடிப்பில் காந்தாரா சாப்டர் 1 சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தை இயக்க காரணம் என்ன என்பது பற்றியும், அவருக்கு ஆர்வமான கதைகள் பற்றியும் ஓபனாக பேசியுள்ளார்.
கன்னட சினிமாவில் தற்போது உயர்ந்துவரும் நடிகர் மற்றும் இயக்குநராக இருந்துவருபவர் ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty). இவர் தனது இயக்கத்தில் வெளியான 2 படங்களின் மூலம் உலகளாவிய பிரபலத்தை பெற்றார். இவரின் இயக்கத்திலும், பிரம்மாண்ட நடிப்பிலும் இறுதியாக வெளியான படம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இந்த படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி தனது நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றிருந்தார். இதில் அவரின் நடிப்பு பார்ப்பவர்களை அலறவைத்திருந்தது. இதில் அவருடன் நடிகர்கள் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth), ஜெயராம் (Jayaram) உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இதில் நடிகை ருக்மிணி வசந்தின் நெகடிவ் கதாபாத்திரமானதுரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தது. இப்படம் கடந்த 2025ம் அக்டோபர் 2ம் தேதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகியிருந்தது.
பான் இந்திய மொழிகளில் வெளியாகியிருந்த இப்படமானது சுமார் ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தை இயக்க காரணம் மற்றும் எந்த மாதிரியான கதைகளின் மீது ஆர்வம் அதிகம் என்பது குறித்து ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தனுஷின் டி55 படத்தில் இவர்தான் ஜோடியா?.. இசையமைப்பாளர் யார் தெரியுமா?




காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை இயக்க காரணம் என்ன என்பது குறித்து ரிஷப் ஷெட்டி பேச்சு :
அவர் நேர்காணல் ஒன்றில் காந்தாரா சாப்டர் 1 படத்தை இயக்க காரணம் என்ன என்பது பற்றி தெரிவித்துள்ளார். அதில் ரிஷப் ஷெட்டி, ” காந்தாரா படத்தை வெறும் பணத்திற்காக மட்டுமே செய்துவிட முடியாது. நான் வேறு எதாவது கதையைத் தேர்வு செய்திருந்தால், ரிஸ்க் எடுப்பதை முற்றிலும் தவித்திருப்பேன். இந்த காந்தாரா படத்தை மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகள் எதுவும் இன்றி மற்ற பார்வையாளர்களும் இது குறித்த பேசியபோது, இந்த கதையை நியாத்துடன் முடிக்கவேண்டும் என நினைத்தேன். காந்தாரா படத்திற்கு முன் நடக்கும் கதையை இயக்கி, அது மக்களுக்கு நியாயம் கொடுக்கும் என நம்பினேன். பின்னர் தெய்வீக தலையீட்டின் காரணமாகத்தான் இந்த காந்தாரா சாப்டர் 1 படத்தை இயக்கியிருந்தேன்.
இதையும் படிங்க : பைசன் படத்தில் அனுபமாவுக்கும் துருவுக்கும் வயது வித்தியாசத்துக்கு காரணம் இதுதான் – மாரி செல்வராஜ்!
காந்தாரா சாப்டர் 1 படம் குறித்து ரிஷப் ஷெட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவு :
உண்மையில் சொல்லப்போனால், காந்தாரா சாப்டர் 1 படத்தை முடிக்கும் வரையில் வேறு எந்த படத்திலும் ஈடுபாடு கொடுக்கவேண்டாம் என நினைத்தேன். அப்போது ஜெய் ஹனுமான் படத்தின் கதை வந்ததல் ஏற்றுக்கொண்டேன். அந்த கதை என்னை விடத்தியது, என்னால் மறக்கமுடியவில்லை. மேலும் எனக்கும் புராணக்கதைகள், வரலாற்றுக்கதைகள் போன்றவற்றில் ஆர்வம் இருக்கிறது. அதன் காரணமாகவும் ஜெய் ஹனுமான் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். மேலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கவும் விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.