ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 எந்த ஓடிடியில் எப்போது வெளியாகிறது தெரியுமா?
Kantara Chapter 1 OTT Update: பான் இந்திய சினிமாவில் கடந்த 2025ம் அக்டோபர் 2ம் தேதியில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றதிரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி உருவாக்கியிருந்தார். இப்படமானது வெளியாகி 4 வாரங்களை கடந்த நிலையில், எந்த ஓடிடியில் வெளியாகிறது என்பது குறித்த அப்டே வெளியாகியுள்ளது.
பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டியின் (Rishabh Shetty) இயக்கத்தில் கடந்த 2025 அக்டோபர் 2ம் தேதியில் வெளியான படம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இப்படமானது கடந்த 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா படத்திற்கு முந்தைய காலத்தில் நடந்த கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் இயக்குனராகவும் முன்னணி நடிகராகவும் ரிஷப் ஷெட்டி பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் நடிகர்கள் ஜெயராம் (Jayaram) மற்றும் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) மிகமுக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இதில் நடிகை ருக்மிணியின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைந்திருந்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இப்படத்தில் மிகவும் அருமையாகவே நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி 4 வாரங்களாகிய நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாக காத்திருக்கின்றது.
இந்நிலையில் பிரபல ஓடிடி நிறுவனம் காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் கொடுத்துள்ளது. அது வேறு எந்த நிறுவனமும் இல்லை அமேசான் ப்ரைம் வீடியோதான் (Amazon Prime Video). காந்தாரா சாப்டர் 1 படமானது 2025 அக்டோபர் 31ம் தேதியில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க : எல்லாத்துக்குமே முழு முதல் காரணம் சிவகார்த்திகேயன்தான் – ரியோ ராஜ் ஓபன் டாக்!
காந்தாரா சாப்டர் 1 ஓடிடி ரிலீஸ் குறித்து அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்ட பதிவு :
get ready to witness the LEGENDary adventure of BERME 🔥#KantaraALegendChapter1OnPrime, October 31@hombalefilms @KantaraFilm @shetty_rishab @VKiragandur @ChaluveG @rukminitweets @gulshandevaiah #ArvindKashyap @AJANEESHB @HombaleGroup pic.twitter.com/ZnYz3uBIQ2
— prime video IN (@PrimeVideoIN) October 27, 2025
காந்தாரா சாப்டர் 1 படத்தின் மொத்த வசூல் விவரம் :
இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் முதல் பாகம் மக்களிடையே எதிர்பாராத வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான நிலையில், இந்த காந்தாரா சாப்டர் 1ன் படமும் எதிர்பாராத வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தற்போதுவரையிலும் சில திரையரங்குகளில் இப்படமானது ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சசிகுமார்? வைரலாகும் தகவல்
திரையரங்குகளில் வெளியாகி காந்தாரா சாப்டர் 1 படம் இதுவரை மொத்தமாக ரூ 818 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது குறித்தான தகவல் koimoi என்ற இணையதளத்தில் பகிரப்பட்டு இருந்தது.
ஆங்கிலத்தில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1 :
ரிஷப் ஷெட்டியின் இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது சுமார் 5 மொழிகளில் வெளியாகியிருந்தது. இந்த அணைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டத்த நிலையில், மேலும் ஆங்கில மொழியிலும் வெளியாகவுள்ளதாம். வரும் 2025 அக்டோபர் 31ம் தேதி முதல் ஆங்கில மொழியிலும் இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.