Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kantara Chapter 1: வசூலில் பட்டையை கிளப்பும் காந்தாரா சாப்டர் 1… 2 வார முடிவில் வசூல் எவ்வளவு ?

Kantara Chapter 1 2nd Week Collection: கன்னட சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படமாக வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த படம்தான் காந்தாரா சாப்டர் 1. இந்த ரிஷப் ஷெட்டி இயக்கி, அதில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படமானது வெளியாகி 2 வாரங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்த படத்தின் வசூல் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Kantara Chapter 1: வசூலில் பட்டையை கிளப்பும் காந்தாரா சாப்டர் 1… 2 வார முடிவில் வசூல் எவ்வளவு ?
காந்தாரா சாப்டர் 1Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Oct 2025 16:31 PM IST

நடிகர் ரிஷப் ஷெட்டியின் (Rishabh Shetty)  நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியான திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இந்த படமானது கன்னட மக்களின் நாட்டார் தெய்வமான பஞ்சுரளி மற்றும் குலிங்கா போன்ற தெய்வங்களின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படமானது, கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான காந்தாரா (Kantara) என்ற படத்திற்கு முன் நடந்த கதைக்களத்தை கொண்ட திரைப்படமாக வெளியாகியிருந்தது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) மற்றும் ஜெயராம் (Jayaram) இணைந்து நடித்திருந்தனர். மற்ற படங்களை விடவும் இந்த படத்தில் நடிகை ருக்மிணியின் நடிப்பு மிகவும் அருமையாகவே இருந்தது என்றே கூறலாம். இப்படத்தின் முதல் பாதியில் இவரின் கதாபாத்திரம் மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டநிலையில், 2 பாதியில் இவரின் கதாப்பாத்திரத்தின் மாற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

அந்த அளவிற்கு ருக்மிணியின் கதாபாத்திரம் இப்படத்தில் மிகவும் அருமையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படமானது கடந்த 2025 அக்டோபர் 2ம் தேதியில் விஜயதசமியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த திரைப்படமானது வெளியாகி 2 வாரங்களை கடந்த நிலையில், இதுவரை உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவித்துள்ளது. இந்த காந்தாரா சாப்டர் 1ன் படமானது உலக அளவில் வசூலில் இதுவரை மொத்தம் சுமார் ரூ 717.50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: டீசல், டியூட், பைசன் படங்களை ஒப்பிட வேண்டாம் – சிலம்பரசன் வேண்டுகோள்!

காந்தாரா சாப்டர் 1 படக்குழு வெளியிட்ட பதிவு

காந்தாரா சாப்டர் 1 படத்தின் பட்ஜெட் :

இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட்டில் இருந்து இதுவரை 3 மடங்கு அதிகம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன் வெளியான காந்தாரா படமானது ரூ 16 கோடி பட்ஜெட்டில் வெளியான நிலையில், கிட்டத்தட்ட 10 மடங்கிற்கும் மேல் வசூல் செய்திருந்தது. முதல் படத்தை ஒப்பிடும்போது காந்தாரா சாப்டர் 1 படத்தின் வசூல் குறைவுதான் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஹாட்ரிக் வெற்றியா? – பிரதீப் ரங்கநாதனின் டியூட் பட விமர்சனம்!

காந்தாரா சாப்டர் 1 எந்த ஓடிடியில் வெளியாகிறது :

இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது திரையரங்குகளில் தற்போது வரையிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தின் நகைச்சுவை, உணர்ச்சி மிகுந்த காட்சி மற்றும் ஆக்ஷன் என மக்களால் இன்றுவரையிலும் ரசிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, இப்படமானது 6 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் பெற்றுள்ள நிலையில், 2025ம் ஆண்டு நவம்பர் முதல் அல்லது 2வது வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.