Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Silambarasan: டீசல், டியூட், பைசன் படங்களை ஒப்பிட வேண்டாம் – சிலம்பரசன் வேண்டுகோள்!

Silambarasans X Post: தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் புதிதாக அரசன் என்ற திரைப்படமானது தயாராகிவருகிறது. மேலும் இன்று 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு இளம் ஹீரோக்களின் படங்கள் வெளியாகவும் நிலையில், படங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மற்றும் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.

Silambarasan: டீசல், டியூட், பைசன் படங்களை ஒப்பிட வேண்டாம் –  சிலம்பரசன் வேண்டுகோள்!
சிலம்பரசன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Oct 2025 14:06 PM IST

நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவர் தெலுங்கு சினிமாவிலும் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக தக் லைஃப் (Thug Life) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தை மணிரத்னம் இயக்க, கமல்ஹாசன் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இதில் கமல்ஹாசனுக்கு இணையான வேடத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சிலம்பரசனுக்கு போதிய வரவேற்பை கொடுக்கவில்லை. இப்படத்தைத் தொடர்ந்த இவர் இணைந்திருக்கும் படம்தான் அரசன் (Arasan). இப்படத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடிக்க, இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran)இயக்கிவருகிறார். இப்படத்தின் ப்ரோமோ வீடியோவும் சமீபத்தில்தான் வெளியானது.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. அதில் அவர், “2025ம் ஆண்டு தீபாவளி நம் இளைஞர்களுக்கான தீபாவளி, இந்த தீபாவளியில் பைசன் (Bison), டீசல் (Diesel)மற்றும் டியூட் (Dude) போன்ற படங்கள் வெளியாகிறது. இந்த படங்களை ஒன்றோடு ஓன்றாக ஒப்பிட வேண்டாம்” என அவர் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சாதித்தாரா துருவ்?.. பைசன் படத்தின் விமர்சனம் இதோ!

ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தது சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

அந்த பதிவில் நடிகர் சிலம்பரசன், “இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது. டீசல், டியூட் மற்றும் பைசன் போன்ற படங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படங்களை ஒன்றோடு ஒன்று ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, நம் தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக அவர்களைக் கொண்டாடத் தொடங்குவோம்.

இதையும் படிங்க: வடசென்னை பாணி.. ரசிகர்களை கவர்ந்த சிலம்பரசனின் அரசன் ப்ரோமோ வீடியோ!

சினிமாவில் உள்ளே நுழைந்தவர்களை, உள்ளே நுழையக் காத்திருப்பவர்களை ஆதரிக்கும் ஒன்றாக  வைத்திருக்கிறோம். மேலும் அனைத்து திரைப்படங்களையும் திரையரங்குகள் சென்று பாருங்கள், அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்” என்று அந்த பதிவில் நடிகர் சிலம்பரசன் குறிப்பிட்டுள்ளார்.

டியூட், டீசல் மற்றும் பைசன் திரைப்படங்கள் :

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் படம்தான் டியூட். இப்படமானது நகைச்சுவை, காதல் மற்றும் மாறுபட்ட திருப்பங்களுடன் இன்று 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகியிருக்கிறது. மேலும் ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம் மற்றும் துருவ் விக்ரமின் பைசன் போன்ற திரைப்படங்களும் இன்றுதான் வெளியாகியிருக்கிறது. மற்ற தீபாவளியை ஒப்பிடும்போது, இந்த 2025ம் ஆண்டு தீபாவளி முழுக்க இளம் நடிகர்களின் தீபாவளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.