Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Arasan: புது காம்போ… வெற்றிமாறன் – சிலம்பரசனின் ‘அரசன்’ படத்துக்கு இசையமைக்கும் அனிருத் – உறுதி செய்த படக்குழு

Arasan Movie Update: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் சிலம்பரசன் இணைந்து நடிக்கவுள்ள திரைப்படம்தான் அரசன். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று திரையரங்குகளில் வெளியாகின்ற நிலையில், தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

Arasan: புது காம்போ…  வெற்றிமாறன் – சிலம்பரசனின் ‘அரசன்’ படத்துக்கு இசையமைக்கும் அனிருத் – உறுதி செய்த படக்குழு
அரசன் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Oct 2025 14:47 PM IST

நடிகர் சிலம்பரசனின் (Silambarasan)  நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப். இப்படத்தை மணிரத்னம் (Mani Ratnam) இயக்க, கமல்ஹாசன் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது ஓரளவு வரவேற்பை பெற்றியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக சிலம்பரசன் இணைந்திருக்கும் பிரம்மாண்ட கூட்டணி திரைப்படம்தான் அரசன் (Arasan). இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கவுள்ளார். சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் காம்போ இந்த அரசன் திரைப்படத்தின் மூலமாக முதல் முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வீ கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் , கலைப்புலி எஸ். தாணு (Kalaipuli S Thanu) தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோ வீடியோவும் விரைவில் வெளியாகிறது.

மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார்தான் இசையமைப்பார் என எதிர்பார்த்த நிலையில், இன்று 2025 அக்டோபர் 16ம் தேதியில் அரசன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சமீபத்தில் வெளியான அரசன் திரைப்படத்தின் இரண்டாவது பார்வைப் போஸ்டரில் அரசன் படத்திற்கு “அனிருத் ரவிச்சந்தர்” (Anirudh Ravichander) இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 3 படம் முதல் மதராஸி படம் வரை… பர்த்டே பாய் அனிருத் ரவிச்சந்தரின் இசைப் பயணம் ஒரு பார்வை!

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அரசன் படம் பற்றி வெளியிட்ட பதிவு

இதுவரை இணையாத காம்போ

இன்று 2025 அக்டோபர் 16ம் தேதியில் இசையமைப்பாளர் அனிருத் தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், பர்த்டே ஸ்பெஷலாக அரசன் திரைப்படத்திற்கு இவர்தான் இசையமைக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுவரை சிலம்பரசனின் எந்த படத்திற்கு அனிருத் இசையமைத்ததில்லை என்ற நிலையில், அரசன் திரைப்படத்தின் மூலமாக இந்த கூட்டணி முதல் முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறது.

அரசன் திரைப்படத்தின் கதைக்களம் :

சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் தயாராகிவரும் இந்த அரசன் திரைப்படமானது, நடிகர் தனுஷின் வட சென்னை திரைப்படத்தின் பின்னணியில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் முக்கிய பங்கற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது “வட சென்னை யுவினிவர்ஸ்” திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினிகாந்தை இயக்கும் பிரபல இயக்குநர்? இணையத்தை கலக்கும் தகவல்

இந்த படத்தின் ஷூட்டிங் இந்த 2025 அக்டோபர் மாதத்திற்குள் தொடங்கவுள்ளதாம். மேலும் இப்படத்தில் சாய் பல்லவி, சமந்தா மற்றும் ஸ்ரீலீலா போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தைகள் நடக்கும் நிலையில், விரைவில் அது குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.