Vetrimaaran: STR49 படம் வட சென்னை 2 இல்ல.. வெற்றிமாறன் பகிர்ந்த விஷயம்!
STR49 Story Reveal: தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவிலக்குறைவான் படங்கள் வெளியாகியிருந்தாலும், பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது STR49 படமானது உருவாகிவருகிறது. இந்நிலையில் அந்த படம் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

நடிகர் சிலம்பரசன் (Silambarasan) மற்றும் வெற்றிமாறனின் (Vetrimaaran) கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம்தான் STR49. இந்த படமானது கடந்த 2025 செப்டம்பர் 4ம் தேதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சிலம்பரசன் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இறுதியாக விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) விடுதலை 2 (Viduthalai 2)படத்தை இயக்கியிருந்தார், இந்த படமானது இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த படத்தை அடுத்தாக சூர்யாவுடன் (Suriya) வாடிவாசல் படத்தில் இணைவதாக இருந்த நிலையில், ஸ்கிரிப்ட் சிக்கல் காரணமாக இந்த படமானது தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், தற்போது சிலம்பரசனுடன் STR49 படத்தில் வெற்றிமாறன் இணைந்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் நிலையில், படத்தின் அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெற்றிமாறன், STR49 படத்தின் கதை பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மோகன்லால் – மம்முட்டி இணைந்து நடிக்கும் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
STR49 படத்தின் கதையை பற்றி ஓபனாக பேசிய வெற்றிமாறன் :
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய இவர், STR49 படம் பற்றி ஓபனாக பேசியுள்ளார். அதில் இயக்குநர் வெற்றிமாறன், நான் அடுத்தது சிலம்பரசனுடன் படம் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். வடசென்னை 2 படம் வந்து 2026ம் ஆண்டில் உருவாகும்.
இதையும் படிங்க : இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் – 15 ஆண்டுகளை நிறைவு செய்தது எந்திரன் படம்!
மேலும் இந்த STR49 படமானது வட சென்னை 2 படத்தின் கதைக்களம் கிடையாது. இந்த STR49 படமானது வட சென்னை படத்தின் கதையின் டைம் லைனில் நடக்கும் மற்றொரு கதையை கொண்ட படமாக இருக்கும். வட சென்னை பட கதையில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்ட படமாக இது இருக்கும்” என இயக்குநர் வெற்றிமாறன் தெளிவுபடுத்தியுள்ளார்.
STR49 பட ப்ரோமோ ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு பதிவு:
Mark your calendars! 🗓
The most awaited combo will be revealed in the promo.
Promo drops on Oct 4th 🔥@SilambarasanTR_ @VetriMaaran @AtmanCineArts #STR49 #VetriMaaran #Simbu#VCreations47 pic.twitter.com/jx9hJCLn7G— Kalaippuli S Thanu (@theVcreations) September 26, 2025
வட சென்னை 2 படம் :
தனுஷின் முன்னணி நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான கேங்ஸ்டர்ஸ் படம்தான் வட சென்னை. இந்த படமானது மாறுபட்ட கதையில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தின் பாகம் 2, எப்போது வருமென ரசிகர்கள் கேட்டிருந்த நிலையில், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவருமே அப்டேட் கொடுத்திருந்தனர்.
அந்த வகையில், இந்த வட சென்னை 2 படமானது வரும் 2026ம் ஆண்டு ஷூட்டிங் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இப்படமானது 2027ம் ஆண்டில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.