Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் – 15 ஆண்டுகளை நிறைவு செய்தது எந்திரன் படம்!

15 Years Of Enthiran: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் எந்திரன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக படக்குழு வெளியிட்ட போஸ்ட் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் – 15 ஆண்டுகளை நிறைவு செய்தது எந்திரன் படம்!
எந்திரன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Oct 2025 17:19 PM IST

இயக்குநர் சங்கர் (Director Shankar) எழுதி இயக்கிய திரைப்படம் எந்திரன். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் டேனி டென்சோங்பா, சந்தானம், கருணாஸ், கொச்சி ஹனீபா, கலாபவன் மணி, டெல்லி குமார், ராகவ், தேவதர்ஷினி, ரேவதி சங்கரன், சாபு சிரில், சாம்ஸ், தேவதாஸ் கனகலா, தீனா, சுகுந்தன், ஷ்ரியா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். அதன்படி கடந்த 1-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் சயின்ஸ் ஃபிக்சன் ஆக்‌ஷன் படமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பாக தயரிப்பாளர் கலாநிதிமாறன் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமார் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

எந்திரன் படத்தின் கதை என்ன?

எந்திரன் படத்தில் விஞ்ஞானியகா இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவரை மாதிரியே இருக்கும் சிட்டி என்ற ரோபோவை கண்டுபிடிக்கிறார். உலகில் உள்ள எல்லா அறிவுகளையும் பொருத்தப்பட்ட ரோபோவாக அதனை உருவாக்குகிறார். இந்த ரோபோவைப் பார்த்து இந்தியாவே பெறுமைப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு விபத்தில் அந்த ரோபோவை பயன்படுத்தும் போது ஒரு இளம் பெண் நிர்வானமாக இருக்கும் போது அனைவரின் முன்னிலையில் அப்படியே காப்பாற்றி கூட்டிவ் அந்து நிறுத்தும். அப்போது தனது நிர்வாணத்தை அனைவரும் பார்த்துவிட்டார்கள் என்று அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்வார்.

அதனை வில்லன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி சிட்டி ரோபோவை டெமாலிஷ் செய்யப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து அந்த ரோபோவை தவறாக பயன்படுத்தி ரஜினிகாந்திற்கு எதிராக சில விசயங்களை செய்கிறார். இதில் இருந்து ரஜினிகாந்த் எப்படி தன்னையும் அந்த ரோபோவையும் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.

Also Read… ஆயுத பூஜையை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளியாகும் மார்கன் படம்!

எந்திரன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம்!