மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம்!
3 Years of Ponniyin Selvan: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பொன்னியின் செல்வன் பாகம் 1. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.

இயக்குநர் மனிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி செப்டம்பர் மாதம் 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செலவன் பாகம் 1. இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் பொன்னியின் செல்வனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருடன் இணைந்து நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபித துலிபால, ஜெயராம், பிரபு, ஆர்.சரத்குமார், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசித்ரா, ரஹ்மான், அஸ்வின் கக்குமானு, லால், கிஷோர், பாபு ஆண்டனி, ஆர்.பார்த்திபன், நாசர், நிழல்கள் ரவி, மோகன் ராமன், வினோதினி வைத்தியநாதன், ஷியாம் பெர்னாண்டோ, பாலாஜி சக்திவேல், யோக் ஜபே, ரியாஸ் கான், வித்யா சுப்ரமணியன், அர்ஜுன் சிதம்பரம், நிம்மி ரஃபேல், வினய் குமார் ஜோசப், ஹாரிஸ் மூசா, கோபி கண்ணதாசன், பாரத் ராஜ், ஏ. சீமான், சுரேஷ் ஏகாம்பரம், அஸ்வின் ராவ், அனில் குமார், சக்தி ரமணி, ராகவ், ராமச்சந்திரன், ஜெயச்சந்திரன், அம்சத் கான், கண்ணன், சுந்தரம், ஜைந்தன், நம்பி, பல்லா பூபாலன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமான பொன்னியின் செல்வன் படத்தின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிகழ்ந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பொன்னியின் செல்வன் படம் பாகம் ஒன்று பிரமாண்டமாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




3 ஆண்டுகளை நிறைவு செய்தது பொன்னியின் செல்வன் படம்:
அதன்படி இந்தப் படம் இன்றுடன் திரையரங்குகளில் வெளியாகி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்ஷன் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவில் கூறியுள்ளதாவது, பொன்னியின் செல்வனின் 3 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம் – நம் இதயங்களில் தொடர்ந்து வாழும் ஒரு காலத்தால் அழியாத காவியம். தமிழ் சினிமாவை மறுவரையறை செய்த ஒரு காவியம் என்று தெரிவித்து இருந்தனர்.
Also Read… சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாராவின் அன்னபூரனி படம் ஓடிடியில் ரிலீஸ்!
பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Celebrating 3 Years of Ponniyin Selvan – a timeless saga that continues to live in our hearts. ❤️ 🌊⚔️ An epic that redefined Tamil cinema! ✨ #3YearsOfPonniyinSelvan1 #PonniyinSelvan1 #PS1 pic.twitter.com/XnTVJ4pX0P
— Lyca Productions (@LycaProductions) September 30, 2025
Also Read… இதுதான் கடைசி வார்னிங்… தவறான செய்திகள் பரப்புவர்கள் மீது மகிமா நம்பியார் காட்டம்