ஒரு நாள் முன்னே தமிழகத்தில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1.. வைரலாகும் தகவல்!
Kantara Chapter 1: ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் மற்றும் முன்னணி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் காந்தார சாப்டர் 1. இந்த படமானது உலகமெங்கும் 2025 அக்டோபர் 2ம் தேதியில் வெளியாகவும் நிலையில், தமிழகத்தில் ஒரு நாள் முன்னே வெளியாகவும் என தகவல்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய மக்களிடையே அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் படம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இந்த படத்தைப் பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty) உருவாக்கியுள்ளார். இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா படத்தின், முன் நடந்த கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 2ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் பிரீமியர் காட்சி (Premiere Show) தமிழகத்தில் ஒரு நாள் முன்னே வெளியாகவுள்ளதாம். அதன்படி காந்தாரா சாப்டர் 1 படத்தின் பிரீமியர் காட்சிகள் வரும் 2025 அக்டோபர் 1ம் தேதி மாலை முதல் ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல் தற்போது இணையத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : விஜயுடன் மோதும் பிரபாஸ்… தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!
தமிழக ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
Due to the recent unfortunate incident, we are cancelling the #KantaraChapter1 promotional event in Chennai tomorrow.
Our thoughts and prayers are with those affected.
Thank you for your understanding, we look forward to meeting our audience in Tamil Nadu at a more appropriate… pic.twitter.com/ROhmiu6glR— Hombale Films (@hombalefilms) September 29, 2025
காந்தாரா சாப்டர் 1 படத்தின் முதல் நாள் காட்சி எப்போது?
தமிழகத்தில் காந்தாரா சாப்டர் 1 படத்தின் காட்சிகள் 2025 அக்டோபர் 2ம் தேதி காலை 9 மணிமுதல் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனுஷின் இட்லி கடை படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.
இதையும் படிங்க : கரூரில் நடந்த விபத்து பெருந்துயர் அளிக்கிறது – நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா
இந்த இரு படங்களுக்கும் இடையே ஒரு நாள் மட்டுமே வித்தியாசம் இருக்கும் நிலையில், எந்த படத்திற்கு வரவேற்புகள் அதிகம் கிடைக்கிறதோ, அந்த படத்தின் காட்சிகள் திரையரங்குகளில் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. அதன்படி வரும் 2025 அக்டோபர் 1ம் தேதியில் தனுஷின் இட்லி கடை படத்திற்கு 5 சிறப்பு காட்சிகள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.
காந்தாரா சாப்டர் 1 படத்தின் பட்ஜெட்
இந்த கந்தரா சாப்டர் 1 படமானது முற்றிலும், பல வருடங்களுக்கு முன் நடந்த கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த் மற்றும் ஜெயராம் உட்பட பல்வேறு பிரபலங்களும் இந்த நடித்துள்ளனர்.
அந்த வகையில் மிக பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் நிலையில், இப்படத்தின் பட்ஜெட் முதல் படத்தை ஒப்பிடும்போது 5 மடங்கு பெரிய பட்ஜெட்தான். இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது சுமார் ரூ 120 கோடி பொருட்ச்செலவில் தயாராகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.