Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஈஸ்வரன் இன்னும் இருக்காரா? காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் இதோ

Kantara Chapter 1 Trailer - Tamil | கன்னட சினிமாவில் உலக அளவில் பிரபலப் படுத்தியது காந்தாரா படம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் முன்னதாகவே வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது முதல் பாகம் வெளியாக உள்ளது.

ஈஸ்வரன் இன்னும் இருக்காரா? காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் இதோ
காந்தாரா சாப்டர் 1Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Sep 2025 14:30 PM IST

கன்னட சினிமாவில் வெளியாகி உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் காந்தாரா சாப்டர் 2. முதல் பாகம் வெளியாவதற்கு முன்பாகவே இரண்டாவது பாகம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஃப்ளாஸ்பேக்காக முதல் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இயக்குநர் ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நாயகனாகவும் ரிஷப் ஷெட்டி தான் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் காடுபெட்டு சிவன், காந்தார, சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் துமிநாடு, மானசி சுதிர், நவீன் டி. பாடில், சுச்சான் ஷெட்டி, ஸ்வராஜ் ஷெட்டி, தீபக் ராய் பனாஜே, ஷனில் குரு, பிரதீப் ஷெட்டி, ரக்ஷித் ராமச்சந்திர ஷெட்டி, பிரபாகர் குந்தர், சந்திரகலா ராவ், சுகன்யா, சதீஷ் ஆச்சார்யா, புஷ்பராஜ் பொல்லார், ரகு பாண்டேஷ்வர், மைம் ராமதாஸ், பாசுமா குடகு, ரஞ்சன் சாஜு, ராஜீவ் ஷெட்டி, ஷைன் ஷெட்டி, வினய் பித்தப்பா, பிரகதி ரிஷப் ஷெட்டி, அதிஷ் ஷெட்டி, ராதாகிருஷ்ண கும்பாலே, நவீன் பொண்டல் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் விஜய் கிரகந்தூர் மற்றும் சாலுவே கவுடா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் வரவேற்பைப் தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 படத்தின் வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருந்தனர்.

காந்தாரா சாப்டர் 1 படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்:

இந்த நிலையில் காந்தாரா சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது படம் வெளியீட்டிற்கு காத்திருக்கின்றது. அதன்படி படம் வருகின்ற அக்டோபர் மாதம் 2-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் சிவகார்ஹ்ட்திகேயன் தனது எக்ஸ் தள பக்கதில் வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இளைஞர்கள் நிச்சயமா வாழ்க்கை பற்றி மேனிஃபெஸ்ட் பண்ணனும் – தனுஷ் கொடுத்த அட்வைஸ்

சிவகார்த்திகேயனின் எக்ஸ் தள பதிவு:

Also Read… நிறைவடைந்தது கௌதம் கார்த்திக்கின் ரூட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு