இளைஞர்கள் நிச்சயமா வாழ்க்கை பற்றி மேனிஃபெஸ்ட் பண்ணனும் – தனுஷ் கொடுத்த அட்வைஸ்
Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் இட்லி கடை. இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் இளைஞர்களுக்கு நடிகர் தனுஷ் சில அட்வைஸ்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இட்லி கடை (Idli Kadai). இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் பேசியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று 20-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு கோயம்பத்தூரில் உள்ள ப்ரோசோன் மாலில் இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் தனுஷ், சத்யராஜ், பார்த்திபன் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இட்லி கடை படக்குழுவினர் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் விழாவில் பேசியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தான் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் குறித்து நடிகர் தனுஷ் பேசினார். தொடர்ந்து அவரது வாழ்க்கைக்கும் சமயலுக்கும் உள்ள இணைப்பு குறித்தும் நடிகர் தனுஷ் நிறைய விசயங்களை ரசிகர்களிடையே பகிர்ந்துகொண்டார் நடிகர் தனுஷ்.




வாழ்க்கை குறித்து மேனிஃபெஸ்ட் பண்ணுங்க:
தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷ் வாழ்க்கையில இளைஞர்கள் நிச்சயமா அவர்கள் என்னவா ஆகப் போறாங்கன்றது மேனிஃபெஸ்ட் பண்ணனும். நீங்க வாழ்க்கை குறித்து மேனிஃபெஸ்ட் பண்ணினாதான் அதோட இலக்கை அடைவீங்க. அப்படி நீங்க நினைச்சுட்டே இருக்கும் போது உங்க கனவு நடந்துடுச்சுனு நீங்க நம்புனா நிச்சயமா அதை நீங்க எட்டுவீங்க. அதனால மேனிஃபெஸ்ட் பண்ணுங்க, கடினமா உழைங்க, கருத்து சொன்றானேனு நினைக்காதீங்க. என் வாழ்க்கையில் இது எல்லாம் நடந்தது அத நான் உங்களுக்கு சொல்றேன். கண்டிபா இதையெல்லாம் நீங்க ஃபாலோ பண்ணுவீங்கனு நம்புறேன் என்றும் நடிகர் தனுஷ் அந்த விழாவில் பேசியுள்ளார்.
Also Read… குட் பேட் அக்லி படத்தின் காப்பி ரைட்ஸ் பிரச்னை – ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்
இணையத்தில் வைரலாகும் தனுஷின் பேச்சு:
#IdliKadai – #Dhanush‘s Advice for Youngsters:
“Manifest your Goal, Hardwork towards the Goal💪. You will definitely achieve it. Do Meditation & Workout, it’ll help in achieving faster🏋️♂️. Don’t think I’m advising too much, I hope you’ll follow it😀✨” pic.twitter.com/vgJtGWYdNC
— AmuthaBharathi (@CinemaWithAB) September 20, 2025
Also Read… அனிருத் கூட நான் போட்டி போடுறனா? சாய் அபயங்கர் சொன்ன விசயம்