AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை விஜய் பயன்படுத்தக்கூடாது”.. திண்டுக்கல் சீனிவாசன்..

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய் வழங்கிய நிதி உதவித்தொகை மிகவும் குறைவு என அவர் கடுமையாக விமர்சித்தார். கரூரில் உயிரிழந்தவர்கள் குடுபத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்கிய நிலையில், சேலத்தில் இறந்தவர் குடுமத்திற்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிகமான நிதி உதவி வழங்கியிருக்க வேண்டும் என்றார்.

“எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை விஜய் பயன்படுத்தக்கூடாது”.. திண்டுக்கல் சீனிவாசன்..
திண்டுக்கல் சீனிவாசன், விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Feb 2026 12:04 PM IST

திண்டுக்கல், பிப்ரவரி 16: தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் ஆண்மை இருந்தால் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஜய், த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அரசியலில் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க: புதிய கட்சி தொடங்கும் சசிகலா?.. பிப்.24ல் வெளியாகும் அறிவிப்பு?.. அதிர்ச்சியில் அதிமுகவினர்!!

செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க வேண்டும்:

அதேசமயம், நயினார் நாகேந்திரனை விமர்சித்த செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வயதைத் தவிர எந்த விதத்திலும் நயினார் நாகேந்திரன் அவரை விட குறைந்தவர் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அதிமுகவை விட்டு வெளியேறியவர்களும், பிற அரசியல் அமைப்பினரும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை பயன்படுத்துவது குறித்து அவர் விமர்சனம் செய்தார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்தக்கூடாது:

குறிப்பாக, நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்களை பயன்படுத்துவது பொருத்தமற்றது என்றும், அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் பொதுச் சொத்தாக உள்ளவர்கள் என்றும் கூறினார். மேலும், விஜய் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு மக்களின் ஆதரவை பெற்ற பின்னரே அவரது வாக்கு வலிமையை மதிப்பிட முடியும் என்றார். 18 வயதிற்கு குறைவானவர்களின் ஆதரவு அரசியலில் கணக்கில் கொள்ள முடியாது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

நிதியுதவி மிகவும் குறைவு:

மேலும், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய் வழங்கிய நிதி உதவித்தொகை மிகவும் குறைவு என அவர் கடுமையாக விமர்சித்தார். கரூரில் உயிரிழந்தவர்கள் குடுபத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்கிய நிலையில், சேலத்தில் இறந்தவர் குடுமத்திற்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிகமான நிதி உதவி வழங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா?

அதேபோல், சேலத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தையும் சென்னைக்கு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து வந்து பேசி குடும்பத்தினருக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், தனது கட்சியினரை வெயிலில் காக்க வைப்பது ஏன்? தனது கட்சி தொண்டர்கள் இறந்தால் ஒருவேளை விஜய்க்கு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.