உங்கள எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே… வெளியானது குஷி படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர்
Kushi Tamil Official Re-Release Trailer | நடிகர் விஜய் நாயகனாகவும் நடிகை ஜோதிகா நாயகியாகவும் நடித்து முன்னதாக திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்ட படம் குஷி. இந்தப் படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ரீ ரிலீஸ் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் (Actor Vijay) நாயகனாக நடித்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் குஷி. கடந்த மே மாதம் 19-ம் தேதி 2000-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி தற்போது 25 வருடத்தை கடந்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விஜயகுமார், ஷில்பா ஷெட்டி, மும்தாஜ், விவேக், நிழல்கள் ரவி, பீனா பானர்ஜி, ஜானகி சபேஷ், நாகேந்திர பிரசாத், கரிஷ்மா சிங், ராஜன் பி. தேவ், ஜெய முரளி, பெசன்ட் ரவி, மணீஷ் பொருண்டியா, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீதர், ஷோபி, ஜப்பான் குமார், ஷாம், ரவி மரியா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சூர்யா மூவிஸ் சார்பாக தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முன்னதாக வெளியான போதே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது 25 ஆண்டுகளைக் கடந்த நிலையில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
வெளியானது குஷி படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர்:
முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் மற்றும் சச்சின் படம் ஆகியவை ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது குஷி படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி வருகின்ற 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… கிளாசிக் படத்தை ரீமேக் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அந்த படம் தான் நடிப்பேன் – நடிகர் கவின்
குஷி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
🎬✨ The reel magic rolls again!
The Kushi Re-Release Trailer Cut is here to set the vibe 💥
Get ready to groove with nostalgia, charm & timeless feels! 🌟https://t.co/d7GvQO8c3gIn Cinemas from Sept 25th 🎬
A re-release celebration by Sakthi Film Factory 🎉@actorvijay…— Sakthi Film Factory (@SakthiFilmFctry) September 18, 2025
Also Read… என்னவளே அடி என்னவளே… 31 ஆண்டுகளை நிறைவு செய்த காதலன் படம்