பட்டாச போட்டு மத்தாளம் கொட்டு… ரீ ரிலீஸாகும் அஜித்தின் அட்டகாசம் படம்
Attagasam Movie: நடிகர் அஜித் குமார் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் அட்டகாசம். இந்தப் படத்தை தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar) நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 12-ம் தேதி 2004-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் அட்டகாசம். இந்தப் படத்தை இயக்குநர் சரண் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் பூஜை, சுஜாதா, பாபு ஆண்டனி, மகாதேவன், நிழல்கள் ரவி, இளவரசன், ஜாஸ்பர், ரமேஷ் கண்ணா, கருணாஸ், வையாபுரி, வி.எம்.சி.ஹனீபா, இளவரசு, மனோபாலா, கிரேன் மனோகர், கத்தரிக்கோல் மனோகர், நெல்லை சிவா, எம்.எஸ்.பாஸ்கர், ராஜேந்திரநாத், ராம்குமார், லட்சுமணன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தன்ர். ஆக்ஷன் காமெடிப் படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை விஜயம் சினி கம்பைன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர்கள் என்.பழனிசாமி, ஜெய பிரசாந்த் என், பி.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரீ ரிலீஸாகும் அட்டகாசம் படம்:
இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற அட்டகாசம் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற அக்டோபர் மாதம் 31-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் 4 கே வடிவில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… நோ தீபாவளி… நோ பொங்கல்… கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் புது தகவல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
[IT’S OFFICIAL] 🚨
THALA AJITH’s Industry Blockbuster #Attagasam Movie Is Set To Re-Release On October 31st 😎🔥
Get Ready To Witness The Theatrical Celebration Once Again In A Grand Manner.,⭐️#AttagasamReRelease | #AjithKumar pic.twitter.com/TS3ugpXjCs
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) September 16, 2025