தனுஷே ஓகே சொல்லிட்டாரு.. மேடையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர்!
Vada Chennai 2 update : தனுஷின் முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் இட்லி கடை. இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், இன்று 2025 செப்டம்பர் 14ம் தேதியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றிருந்தது. இதில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், தனுஷின் நடிப்பில் வட சென்னை 2 படம் பற்றி பேசியிருக்கிறார்.

கோலிவுட் சினிமாவில் நடிகராக நுழைந்து, தற்போது பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் இயக்கத்தில் 4வது உருவாகியிருக்கும் படம்தான் இட்லி கடை (Idli kadai). இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் நிலையில், அவருக்கு இணையாக நித்யா மேனன் (Nithya Menen) நடித்துள்ளார். இந்த ஜோடி, திருச்சிற்றம்பலம் படத்திற்கு அடுத்ததாக, இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இட்லி கடை படமானது கிராமம், சொந்தம் போன்ற எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியிருக்கிறதாம். இப்படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அதை முன்னிட்டு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று 2025 செப்டம்பர் 14ம் தேதியில், சென்னையில் உள்ள நேரு உள் அரங்கத்தில் நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் ஐசாரி கே கணேஷ் (isari K Ganesh) கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின்போது பேசிய அவர் வட சென்னை 2 (Vada chennai 2)படம் பற்றி பேசியுள்ளார்.




இதையும் படிங்க : ராயன் படத்தை பார்த்தபோதே தனுஷ் கூட வேலை செய்யனும்னு நினச்சேன் – அருண் விஜய்
வடசென்னை 2 படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் :
இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ், வட சென்னை 2 படத்தை பற்றி பேசியிருந்தார். அதில் அவர், “தனுஷின் வட சென்னை 2 படமானது விரைவில் வருகிறது, அந்த படத்திற்கு தனுஷ் சாரே ஓகே சொல்லிவிட்டார். வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தனுஷின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வட சென்னை 2 படமானது உருவாகும்” என அவர் அப்டேட் கொடுத்துள்ளார்.
இட்லி கடை படக்குழு வெளியிட்ட இசை வெளியீடு விழா குறித்த பதிவு :
Their presence lights up and blesses the event 💫🙏#IdliKadaiAudioLaunch@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran @thesreyas @wunderbarfilms @saregamasouth @dancersatz @MShenbagamoort3 @kavya_sriram @Kiran10koushik @editor_prasanna… pic.twitter.com/0LRKcEzYay
— DawnPictures (@DawnPicturesOff) September 14, 2025
இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது :
தனுஷின் 52வது படமாக இந்த இட்லி கடை படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில் கிராமம் மற்றும் உறவுகள் போன்ற கதையில் உருவாகியிருக்கிறதாம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, பார்த்திபன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ் மற்றும் அருண் விஜய் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : அஜித் ரசிகர்கள் பாணியை பின்தொடரும் சூர்யாவின் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!
இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வரும் 2025 செப்டம்பர் 22 அல்லது 23ம் தேதியில் வெளியாகி வாய்ப்புகள் அதிகம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.