Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya : அஜித் ரசிகர்கள் பாணியை பின்தொடரும் சூர்யாவின் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!

Karuppu Movie Release Delay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் கருப்பு படமானது தயாராகியிருக்கும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் பாணியில் சூர்யாவின் ரசிகர்கள் அடித்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Suriya : அஜித் ரசிகர்கள் பாணியை பின்தொடரும் சூர்யாவின் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!
சூர்யாவின் கருப்பு பட போஸ்டர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Sep 2025 16:14 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் (RJ. Balaji) இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம்தான் கருப்பு (Karuppu). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் நவம்பர் மாதத்தில் சூர்யா45 (Suriya45)என தற்காலிக டைட்டிலுடன் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா (Trisha) நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் சுமார் 20 வருடங்களுக்கு பின் இப்படத்தில் இணைந்து நடித்திருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருப்பு படமானது முற்றிலும் அதிரடி க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியிருகிறது.

அந்த வகையில், இப்படத்தின் ரிலீஸ் ஆரம்பத்தில் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் பாணியில் சூர்யாவின் ரசிகர்கள் கருப்பு ரிலீஸ் எப்போது என கேள்விகளை எழுப்பி போஸ்டர்களை வீதிகளில் ஒட்டி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தெலுங்கு சினிமாவிலும் வில்லனாக அறிமுகம் ஆன சாண்டி – வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் கருப்பு பட ரிலீஸ் குறித்த ரசிகர்கள் போஸ்டர் :

அஜித் ரசிகர்கள் பாணியை தொடரும் சூர்யாவின் ரசிகர்கள் :

அஜித் குமாரின் ரசிகர்கள் வலிமை மற்றும் விடாமுயற்சி படங்களின் தொடர்பான ரிலீஸ் தேதி மற்றும் ட்ரெய்லர் போன்ற அப்டேட்டுகளுக்காக போஸ்டர் அடித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் தற்போது அவர்கள் பாணியில் சூர்யாவின் ரசிகர்கள் கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட்டை கேட்டு போஸ்டர்களை வீதிகளில் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ராவோடு ராவா கோட்டையில உக்காந்துட்டு புதுபுது சட்டம் போடுவீங்க, தூங்கி எழுந்து பாத்தா நாங்க குற்றவாளியா? – தண்டகாரண்யம் படத்தின் ட்ரெய்லர் இதோ!

கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது :

நடிகர் சூர்யாவின் 45வது படமாக இந்த கருப்பு திரைப்படமானது உருவாகியிருக்கிறது. இதை ஆர்.ஜே. பாலாஜி இயக்க தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இவரின் இசையமைப்பில் கருப்பு படத்தின் டீசரில் வெளியான தீம் பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப்பார்க்கவைத்தது என்றே கூறலாம்.

இந்நிலையில் இந்த படமானது  2025 தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில், தொடர்ந்து கோலிவுட் படங்கள் தீபாவளிக்கு இறங்குவதால் கருப்பு படத்தின் ரிலீஸ் மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், பொங்கல் ரேஸிலும் கருப்பு படம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் இபோது என்று தெரியாமல் சூர்யாவின் ரசிகர்கள் தடுமாறி வருகின்றனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.