விமானப் பயணம் பொதுவாக பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், உலகில் சில விமான நிலையங்கள் அனுபவம் மிக்க விமானிகளுக்கே சவாலாக மாறுகின்றன. கடும் மலைத்தொடர்கள், மிகக் குறுகிய ஓடுபாதைகள், பலத்த காற்று மற்றும் கடல் எல்லைகள் போன்ற காரணங்களால், இங்கு விமானம் தரையிறங்குவது ஒரு நொடிக்கூட கவனச் சிதறலுக்கு இடமளிக்காத அபாயகரமான அனுபவமாக அமைகிறது. இவை உலகின் மிகவும் ஆபத்தான விமான நிலையங்களாகக் கருதப்படுகின்றன.