Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் இன்று… 11 வருடங்களை கடந்தது என்னை அறிந்தால் படம்!

11 Years Of Yennai Arindhaal Movie: தமிழ் சினிமாவில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் என்னை அறிந்தால். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை படக்குழுவினரும் ரசிகர்களும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் இன்று… 11 வருடங்களை கடந்தது என்னை அறிந்தால் படம்!
என்னை அறிந்தால் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Feb 2026 17:28 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். தனது ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது நடிப்பு மற்றும் ரேஸிங் என இரண்டையும் இரண்டு கண்களாக நினைத்து தொடர்ந்து பிசியாக வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 05-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் என்னை அறிந்தால். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்த என்னை அறிந்தால் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் அருண் விஜய்,
திரிஷா கிருஷ்ணன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், அனிகா சுரேந்திரன், பார்வதி நாயர், ஆஷிஷ் வித்யார்த்தி, சுமன், நாசர், அவினாஷ், ஆர்.என்.ஆர்.மனோகர், ஸ்டண்ட் சில்வா, அமித் பார்கவ், பெசன்ட் ரவி, பாவனா அனேஜா, ராஜசிம்மன், மோனா ககடே, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், ரேகா சுரேஷ், கே.பி.சேகர், செல் முருகன், பாண்டி ரவி, ஒஸ்தே ஜே. ராம், ஆத்மா பேட்ரிக், டேனியல் பாலாஜி, ராஜீவன், கௌதம் வாசுதேவ் மேனன், ராம்ஜீ என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

11 வருடங்களை கடந்தது என்னை அறிந்தால் படம்:

இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் அஜித் குமாரிக்கு டான்ஸ்டர் த்ரிஷா உடன் பழக்கம் ஏற்படுகிறது. அவருடன் பழகியபிறகு தனது குழந்தையுடன் தனியாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார் நடிகர் அஜித் குமார். பிறகு த்ரிஷாவை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார். இப்படி இருக்கும் சூழலில் திருமணத்திற்கு முதல் நாள் அஜித் குமாரின் எதிரிகள் த்ரிஷாவை கொலை செய்துவிடுகின்றனர்.

Also Read… பூக்கி படத்திலிருந்து வெளியானது புடிக்கலே புடிக்கலே வீடியோ பாடல்

அதனைத் தொடர்ந்து போலீஸ் வேலையை விட்டுவிட்டு அஜித் குமார் த்ரிஷாவின் மகளான அனிகாவை வளர்க்கத் தொடங்குகிறார். இப்படி சுமூகமாக இவர்களின் வாழ்க்கை சென்றுகொண்டிருந்த போது மீண்டும் பழைய வாழக்கைக்கு சென்று எதிரிகள் அனைவரையும் எப்படி ஒழிக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Also Read… Karathey Babu: ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட ஷூட்டிங் நிறைவு.. எப்போது ரிலீஸ் தெரியுமா?