Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Nithya Menen : இதுவரை யாரும் என்னை அப்படி பார்த்திருக்கமாட்டீங்க.. நித்யா மேனன் ஓபன் டாக்!

Nithya Menen About Idli Kadai Movie : இந்த 2025ம் ஆண்டு தனுஷின் நடிப்பில் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் படம்தான் இட்லி கடை. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மிக பிரம்மாண்டமாக நடந்த நிலையில் பேசிய நித்யா மேனன், எந்த படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Nithya Menen : இதுவரை யாரும் என்னை அப்படி பார்த்திருக்கமாட்டீங்க..  நித்யா மேனன் ஓபன் டாக்!
நித்யா மேனன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Sep 2025 22:06 PM IST

தென்னந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நித்யா மேனன் (Nithya Menen). இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் தனுஷ் (Dhanush) வரை பல்வேறு பிரபலங்களுடன் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக தலைவன் தலைவி படமானது வெளியானது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் (Vijay sethupathi) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை புடைத்திருந்தது. இந்த படத்தினை அடுத்ததாக இவரின் நடிப்பில் வெளியாகி காத்திருக்கும் படம்தான் இட்லி கடை (Idli Kadai). இந்த படத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) இயக்கி நடித்திருக்கிறார்.

இதில் தனுஷிற்கு ஜோடியாக “கயல்” (Kayal) என்ற வேடத்தில், நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இந்த இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று 2025 செப்டம்பர் 14ம் தேதியில் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில் பேசிய நித்யா மேனன், இந்த படத்தில் தனது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும் என கூறியிருக்கிறார். அவர் பேசியது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : ராயன் படத்தை பார்த்தபோதே தனுஷ் கூட வேலை செய்யனும்னு நினச்சேன் – அருண் விஜய்

இட்லி கடை படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி நித்யா மேனன் பேசிய விஷயம் :

தனுஷின் நடிப்பில் தயாராகியிருக்கும் இட்லி கடை படத்தின் ஆடியோ லான்ச் இன்று, 2025 செப்டம்பர் 14ம் தேதியில் நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நித்யா மேனன், “இட்லி கடை இசை வெளியீடு விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். எல்லாரும் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இதையும் படிங்க : எம்.குமரன் பட பாணியில் க்ளைமேக்ஸ்… இட்லி கடை படத்தின் கதைக்களம் இதுவா?

இந்த படத்தில் என்னை மொத்தமாக வித்தியாசமான விதத்தில் பார்ப்பீங்க. நானும் இந்த இட்லி கடை படத்தின் வெளியீட்டை நோக்கி ஆர்வமாக காத்திருக்கிறேன். நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டிய படம்” என அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நித்யா மேனன் பேசியிருந்தார். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இட்லி கடை படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :

இந்த இட்லி கடை படமானது வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தனுஷின் 52வது படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இவரின் இசையமைப்பில் இட்லி கடை படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியான நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தற்போது இட்லி கடை படத்தின் மீது, ரசிகர்கள் மத்தியில் மேலும் அதீத எதிர்பார்ப்புகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது.