Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Idli Kadai Movie : எம்.குமரன் பட பாணியில் க்ளைமேக்ஸ்… இட்லி கடை படத்தின் கதைக்களம் இதுவா?

Idli Kadai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் தற்போது தயாராகியிருக்கும் படம்தான் இட்லி கடை. இந்த படத்தின் கதைக்களத்தை பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Idli Kadai Movie : எம்.குமரன் பட பாணியில் க்ளைமேக்ஸ்… இட்லி கடை படத்தின் கதைக்களம் இதுவா?
தனுஷின் இட்லி கடை படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Sep 2025 17:17 PM IST

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருந்தார்.  இப்படமானது தெலுங்கில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தமிழில் தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் படம்தான் இட்லி கடை (Idli Kadai). இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷுடன் நடிகர்கள் நித்யா மேனன் (Nithya Menen), சத்யராஜ் (Sathyaraj), அருண் விஜய் (Arun Vijay), ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, பார்த்திபன் மற்றும் பலர் இணைந்து நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படமானது வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் அந்த கதைக்களம் என்னவென்று தெளிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன கவின் – என்ன காரணம் தெரியுமா?

தனுஷின் இட்லி கடை படத்தின் கதைக்களம் இதுவா :

இந்த படத்தில் தனுஷ், “சிவநேசன்” என்ற ராஜ்கிரணின் இளமை வேடத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருக்கு இணையாக நித்யா மேனன், “கயல்” என்ற வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சிவநேசனின் மகன், “முருகன்” என்ற வேடத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் கதை என்றவென்றால் ஷாலினி பாண்டே மற்றும் தனுஷ் இருவரும் அண்ணன் தங்கை. தனுஷ் தனது தங்கையான ஷாலினி பாண்டேவை மிக பணக்காரரான சத்யராஜின் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

இதையும் படிங்க : கவர்ச்சி உடை.. அந்த இயக்குநரின் படம்.. பல ஆண்டுகள் கழித்து பகீர் கிளப்பிய நடிகை மோகினி!

சத்யராஜின் மகன்தான் அருண் விஜய். இப்படத்தில் அருண் விஜய் பாக்ஸராக நடித்திருக்கிறார். இதில் தனுஷ் மற்றும் அருண் விஜயின் குடும்பத்திற்கு இடையே நடக்கும் பிரச்சனைதான் மெயின் கதையாகும். மேலும் இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி, எம் குமரன் சன் ஆப் மகாலெட்சுமி படத்தின் கதையை போல, சகோதரி செண்டிமெண்ட் கதைக்களத்தில் இருக்கிறதாம். இந்நிலையில், தற்போது இட்லி கடை படத்தை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இட்லி கடை படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :

இட்லி கடை படத்தின் பட்ஜெட் என்ன :

தனுஷின் இந்த இட்லி கடை படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் மற்றும் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படமானது சுமார் ரூ 150 கோடிகளுக்கு மேல் பொருட்செலவில் தயாராகியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.