Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மேடையில் மாறி மாறி கலாய்த்துக்கொண்ட ரஜினிகாந்த் – இளையராஜா… வைரலாகும் வீடியோ

50 Years Of Ilaiyaraja: இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நேற்று தமிழக அரசு சார்பாக விழா ஒன்று பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் இளையராஜா குறித்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துகொண்டனர். அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேடையில் மாறி மாறி கலாய்த்துக்கொண்ட ரஜினிகாந்த் – இளையராஜா… வைரலாகும் வீடியோ
ரஜினிகாந்த் - இளையராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Sep 2025 11:01 AM IST

இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்து தனது புகழை உச்சத்தில் வைத்திருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா (Music Director Ilaiyaraja). இவர் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்து பயணிப்பதற்காகவும், சிம்பொனி இசை அமைத்து உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதற்காகவும் தமிழக அரசு சார்பில் நேற்று 13-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விழா ஒன்று பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் கலந்துக்கொண்டனர். அதில் குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் உள்ளிட்டோர் இளையராஜா குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து இளையராஜா அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசும் போது ரஜினிகாந்த் குறித்து பேசியதும் தற்போது வைரலாகி வருகின்றது.

நிகழ்ச்சி தொடங்கியதும் கமல் ஹாசன் பேசி முடித்ததும் அடுத்ததாக ரஜினிகாந்த் இளையராஜா குறித்து பேசினார். அதில் இளையராஜாவின் இசை குறித்தும் அவரது ஆன்மிக நம்பிக்கை குறித்தும் நிறைய விசயங்களை ரஜினிகாந்த் பேசினார். சாமி என்று ஏன் கூப்பிடுகிறார் என்பதற்கான காரணத்தையும் விளக்கினார்.

அரை பாட்டில் பீர் குடிச்சுட்டு நடிகைகள் பற்றி காசிப் செய்த இளையராஜா:

இளையராஜா பேசியபோது ரஜினிகாந்த் இந்த விழாவிற்கு முன்னதாக போன் செய்து என்ன சாமி நீங்க பன்ன சேட்டைகள் எல்லாம் சொல்லவா என்று கேட்டார். நானும் உங்களுக்கு என்ன சொல்லனுமோ சொல்லுங்க என்றேன் என்றார் இளையராஜா. உடனே மேடையில் அமர்ந்து இருந்த ரஜினிகாந்த் போடியத்தின் அருகே வந்து இளையராஜா உடன் மது அருந்திய சம்பவம் குறித்து கலகலப்பாக பேசினார்.

அப்போது ஜானி படத்தின் இசையமைக்கும் பணியின் போது நானும் இயக்குநரும் சாமி (இளையராஜா) கூடதான் இருந்தோம். நாங்க ரெண்டுபேரும் ட்ரிங்ஸ் சாப்பிட்டுடு இருந்தோம். அப்போ சாமிகிட்ட கேட்டோம் குடிக்கிறீங்களானு. சரினு சொல்லிட்டு ஒரு அடை பாட்டில் பீர் குடிச்சாரு.

அரை பாட்டில் பீர் குடிச்சுட்டு அவர் பண்ணின சேட்டை இருக்கே. நடிகர்கள் பற்றி எல்லாம் காசிப் பன்றாரு. குறிப்பா சொல்லனும்னா நடிகைகள் பத்தி காசிப் செய்தார் என்று வெளிப்படையாக பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பரியேறும் பெருமாள் படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே விட்டுட்டு போயிடலாம் நினச்சேன் – மாரி செல்வராஜ் சொன்ன விசயம்

இணையத்தில் வைரலாகும் ரஜினி – இளையராஜா பேச்சு:

Also Read… விடாமுயற்சி படம் வெற்றிப்படம்தான் – இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன விசயம்!